twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த மனசுதான் வேணும்.. தானாக முன்வந்து சம்பளத்தை குறைத்த விஜய்ஆண்டனி.. பாராட்டும் தயாரிப்பாளர்கள்!

    By
    |

    சென்னை: பிரபல ஹீரோ, தானாக முன் வந்து தனது சம்பளத்தை குறைத்ததை அடுத்து அவரை தயாரிப்பாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    அவர்களின் வாழ்வாதாரம் சிக்கலாகி உள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும் சினிமாதுறை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

    அசிங்கமா பேசிய விஜய் ரசிகர்.. நாய் என பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை.. ரணகளமாகும் டிவிட்டர்!அசிங்கமா பேசிய விஜய் ரசிகர்.. நாய் என பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை.. ரணகளமாகும் டிவிட்டர்!

    குறைக்க வேண்டும்

    குறைக்க வேண்டும்

    கடந்த 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காததால், தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் டாப் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் பாதியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழ் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த கோரிக்கையை வைத்த நிலையில், கேரள, தெலுங்கு சினிமா துறையிலும் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    இந்நிலையில் பிரபல ஹீரோ விஜய் ஆண்டனி, தானாக முன் வந்து தனது சம்பளத்தில் 25 சதவிகித்தை குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளார். விஜய் ஆண்டனி, இப்போது, பெப்சி சிவா தயாரிப்பில், 'தமிழரசன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    அக்னி சிறகுகள்

    அக்னி சிறகுகள்

    இதையடுத்து, அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும், 'அக்னி சிறகுகள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை நவீன் இயக்குனர். அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன் உட்பட பலர் இதில் நடித்து வருகின்றனர். கஜகஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இதையடுத்து ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிக்கும் 'காக்கி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

    பாதிக்கக் கூடாது

    பாதிக்கக் கூடாது

    இந்தப் படத்தை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த முன்று படங்களும் இந்த வருடம் வெளியாகும்படி தயாரிக்கப்பட்டு வந்தன. லாக்டவுன் காரணமாக, தன்னை நம்பி படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளத்தில் 25% குறைத்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    சம்பளத்தில் ஒரு பகுதி

    சம்பளத்தில் ஒரு பகுதி

    விஜய் ஆண்டனியின் இந்த செயலை தயாரிப்பாளர் டி.சிவா பாராட்டியுள்ளார். 'அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்துள்ள விஜய் ஆண்டனியை பாராட்டுகிறேன்' என்று அவர் கூறியுள்ளார். மற்ற படங்களின் தயாரிப்பாளர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.

    English summary
    Vijay antony has slashed 25% of his agreed salary for his upcoming movies which are currently in different stages of production.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X