பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. விஜய் ஆண்டனிக்கு காயம்.. மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : மலேஷியாவில் நடைபெற்று வரும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால், நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கி நடித்தும் வருகிறார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தில், கோடீஸ்வரான விஜய் ஆண்டனி அம்மாவின் உயிரைக் காப்பாற்ற பிச்சைகக்காரனாக மாறி தெருத்தெருவாக பிச்சை எடுத்து அம்மாவை காப்பாற்றுகிறார். இதுவரை வராத வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

பிச்சைக்காரன் 2

பிச்சைக்காரன் 2

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 தயாராகி வருகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமில்லாமல் இயக்கி, நடித்து, இசையமைக்கிறார். படத்தின் படத்தொகுப்பையும் அவரே மேற்கொள்கிறார். இத்திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விபத்தில் சிக்கினார்

விபத்தில் சிக்கினார்

இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் லங்காவி தீவில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, படகு விபத்தில் சிக்கினார் விஜய் ஆண்டனி. அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, படக்குழுவினர் அவருக்கு முதல் உதவி அளித்து லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூர் அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்தால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. பிச்சைக்காரன் 2 படத்தில் ஜான் விஜய், ஹரீஷ் பேராடி, ஒய்ஜி மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரிங்களில் நடிக்கிறார்கள். இபபடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னிச் திறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம், கொலை,வெள்ளிமயில் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X