கோடியில் ஒருவன் படத்திற்காக எடிட்டிராக மாறும் விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஆள்', 'மெட்ரோ' படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், 'கோடியில் ஒருவன்'.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் வில்லனாக நடித்துள்ளார்.

இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டியூஷன் வாத்தி

டியூஷன் வாத்தி

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி விஜய ராகவன் எனும் டியூஷன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது விஜய் ஆண்டனியின் 14வது திரைப்படமாகும்.

படம் முழுவதுமாக

படம் முழுவதுமாக

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இந்த படத்தில் முழுவதுமாக எடிட்டிங் வேலைகளையும் செய்துள்ளார். இதற்கு முன் திமிரு பிடிச்சவன் படத்தில் சில காட்சிகளை எடிட் செய்திருந்தார், முதல் முறையாக படம் முழுவதையும் எடிட் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

அதிக பட்ஜெட்

அதிக பட்ஜெட்

இந்த படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவரவுள்ளது. தமிழில் "கோடியில் ஒருவன்" எனவும், தெலுங்கில் "விஜய ராகவன்" எனவும் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் நடிப்பில் இதுவரையில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் இதுவே.

பெரிய எதிர்பார்ப்பு

பெரிய எதிர்பார்ப்பு

ஏப்ரல் மாதம் ஏற்கனவே சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஏப்ரல் மாதம் நடுவில் இந்த படம் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X