Don't Miss!
- News
"கேட்டுச்சா".. பாஜக வாயே திறக்கலயே.. வேங்கைவயல் விஷயத்தில் ஏன் ஒருத்தரும் கைதாகல? சீறும் திருமாவளவன்
- Lifestyle
உங்க ழுழங்காலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது ஆபத்தானதாம்...உங்களால நடக்க முடியாம கூட போகலாமாம்!
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்திக்கும் போறாரு விஜய் ஆண்டனி... யார் டைரக்ஷன்லன்னு பாருங்க
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.
அதிகமான படங்களில் நடித்துவரும் கோலிவுட் ஹீரோ என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
இந்நிலையில் இவர் தற்போது இந்தியிலும் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தியில் உருவாகும் புதிய படத்தில் அவர் கமிட்டாகியுள்ளார்.
இயக்குனர்
ராம்
இயக்கத்தில்
புத்தராக
நடிக்கிறாரா
சிம்பு?

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். திடீரென்று பார்த்தால் நடிகராக நடிக்கத் துவங்கினார். முன்னதாகவே அவரது பாடல்களில் என்ட்ரி கொடுத்த அவருக்கு நடிப்பு சிறப்பாகவே அமைந்தது. ஆரம்பத்தில் சைக்கலாஜிக்கல் படங்களில் நடித்தவர் தொடர்ந்து கமிர்ஷியல் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

கலவையான விமர்சனங்கள்
அவரது நடிப்பு குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்கெல்லாம் ஒரே வரியில் பதில் கூறினார் விஜய் ஆண்டனி. தான் நடிகனாக இல்லாமல் ஹீரோவாக இருக்கவே விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே கோலிவுட்டில் விஜய் சேதுபதிக்கு போட்டியாக அதிகமான படங்களில் நடித்து வருபவர் என்ற பெயரும் இவருக்குண்டு.

3 படங்கள் ரிலீசுக்கு ரெடி
சமீபத்தில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய இவரது படங்களின் சூட்டிங்க் நிறைவடைந்துள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி
அடுத்ததாக பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம் ஆகிய 4 படங்களின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்ததாக சுசீந்திரனின் இயக்கத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வீரபாண்டியபுரம் ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனியின் படத்தை இயக்கவுள்ளார் சுசீந்திரன்.

டி இமான் இசை
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கவில்லை. மாறாக டி இமான் இசையமைக்கவுள்ளார். இதனிடையே தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ள மற்றொரு படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

நேரடி இந்திப்படத்தில் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனியில் படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வருகின்றன. ஆனால் நேரடியாக அவர் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இந்திப் படத்தில் நடிக்கவுள்ளது அவரது சினிமா கேரியரில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.