Maargan Blue Sattai Maran Review: மார்கன் வேலைக்கு ஆகாது.. ப்ளூ சட்டை மாறன் பளிச் விமர்சனம்!
சென்னை: எடிட்டர் லியோ ஜான் பால் இயக்குநராக களமிறங்கியுள்ள படமான மார்கன் படத்தை தயாரித்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மேலும் இந்த படத்திற்கு அவரே இசையமைக்கவும் செய்துள்ளார். இயக்குநரே படத்தின் எடிட்டிங் வேலைகளையும் செய்துள்ளார். படம் நேற்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், படம் எப்படி உள்ளது என்பது குறித்து தனது விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மார்கன் விமர்சனம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் ஆரம்பத்தில் இரவில் தனியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்கிறார். ஊசியைப் போட்டு கொலை செய்கிறார். இதனால் உடல் கருகி இறந்து விடுகிறார்கள். இந்த செய்தி பேப்பரில் வருகிறது. இது போன்ற வழக்கு ஒன்றை ஏற்கனவே மும்பையில் விசாரித்த கதாநாயகன், இந்த வழக்கை விசாரிக்க சென்னைக்கு வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சாலையில் இருக்கும் சிசிடிவி மூலம் ஒரு துப்பு கிடைக்கிறது. அதன் மூலம் ஒருவர் மீது சந்தேகம் வர, அவனை நெருங்கி அவன் கொலைகாரனா என்று கண்டு பிடிப்பதைக் காட்டிலும் அவனிடத்தில் தனி ஆற்றல் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதன் பின்னர்தான் தெரிந்து கொள்கிறார், இந்த கொலைக்கும் அவனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என. ஆனால் அவனிடத்தில் இருக்கும் தனி ஆற்றலைக் கொண்டு இந்த கொலை வழக்கை தீர்க்க முடியும் என கதாநாயகன் நம்புகிறார். அது என்ன ஆற்றல், அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.
ஆர்வத்தை தூண்டிய இடம்: இந்த படம் நல்ல மர்டர் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக தான் போகப் போகிறது என நினைத்தோம். கதை தொடங்கியதில் இருந்து, குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட அந்த நபரிடம் இருந்த தனி ஆற்றல் வரை எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இவை எல்லாம் படத்தின் மீது ஆர்வத்தை தான் தூண்டியது. இதில் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கிறது பார் என, டைம் டிராவல் எல்லாம் செய்து கண்டுபிடிப்பான் என கூறியது படத்தை ஃபேன்டசி படம் போல கொண்டு சென்றுவிட்டது. அது இந்த படத்திற்கு பொருந்தவில்லை. அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நம்பிக்கை போய்விட்டது: கதை இவ்வாறு நகர்ந்ததால் படத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. அதன் பின்னர் அவர்கள் கூறிய எதையுமே நம்ப முடியவில்லை. படம் வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருந்துவிட்டது. படத்தையே காப்பாற்றக்கூடிய ஸ்பெஷல் ஐட்டம் என சிலவற்றை அவர்கள் வைத்திருந்தார்கள் அல்லவா, அவை எல்லாம் எந்த வகையிலும் படத்தைக் காப்பாற்றவில்லை. எதுவும் படத்தைக் காப்பாற்றவில்லை என்றாலும் படத்தில் ஒரு கருத்து சொல்லி வைத்துவிடுவோம்.
வேலைக்கு ஆகாத படம்: அது படத்தை காப்பாற்றிவிடும் என நம்பி உள்ளார்கள். அந்த கருத்தும் படத்தை காப்பாற்றவில்லை. இந்த படத்தை நல்ல கிரைம் திரில்லர் படமாக எடுத்திருக்கலாம் அல்லது முழுக்க முழுக்க ஒரு ஃபேண்டசி படமாக எடுத்திருக்கலாம். ரெண்டும் கட்டான எடுத்து வேலைக்கு ஆகாத படமாக எடுத்து வைத்துவிட்டார்கள்" என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











