Maargan Box Office: பாராட்டுகளை குவித்த விஜய் ஆண்டனியின் மார்கன்.. வசூலில் குவித்தது எவ்வளவு?
சென்னை: விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இசையமைத்துள்ள படம் மார்கன். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் புகழ் பெற்ற படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். கிரைம் திரில்லர் சப்ஜெக்ட்டை படமாக கொண்டுள்ள மார்கன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாராட்டுக்களை குவித்து வரும் இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதைக் காட்டிலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் என்பதுதான் சரியாக இருக்கும். அதேபோல் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜய் தீஷன். இந்த படத்தில் தான் அஜய் தீஷன் அறிமுகம் என்றாலும் அவர் தனது அட்டகாசமான நடிப்பால் படத்தின் முதல் பாதியை சுமந்துள்ளார்.
படத்தின் கதை, திரைக்கதை, பின்னணி இசை உள்ளிட்டவை ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. விஜய் ஆண்டனிக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தப்படுத்தும் புள்ளி அப்லாஸ்களை அள்ளுகிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை மொத்த படமும் பரபரப்பாகவே நகர்கிறது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிகர்களை திருப்தி அடைய வைத்ததும் பாராட்டுகளுக்கு மற்றொரு காரணம்.

1000 திரைகள்: விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தை உலகம் முழுவதும், 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்ததாக படக்குழு தெரிவித்தது. படத்தின் டிரைலரே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. மேலும் படத்தின் முக்கியமான காட்சிகளையே டிரைலரில் கொண்டு வந்து விட்டார்களே என்ற கேள்வியும் எழுந்தது.
அடக்கி வாசித்த விஜய் ஆண்டனி: ஆனால் மார்கன் படத்தில் பல காட்சிகள் ஆச்சரியமூட்டும் காட்சிகளாக உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் மொத்தமாக பாராட்டுவதே கிளாமாக்ஸ் காட்சியையும், படத்தின் திரைக்கதையில் உள்ள சில டாட்களை லாஜிக்கோடு இணைத்ததும் மிகவும் முக்கியமான காரணம். படம் பார்த்த ரசிகர்கள் சிலர் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள், நடனம் என எதுவும் இல்லாமல், விஜய் ஆண்டனி அடக்கி வாசித்துள்ளதே படத்திற்கு பிளஸ் என கூறி வருகிறார்கள். பாராட்டுகளை குவித்த படம் வசூலில் எந்த அளவுக்கு பர்பாம் செய்துள்ளது என்பதைக் காணலாம்.

வசூல் நிலவரம்: பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரங்களை வெளியிடும் சாக்.நிக் வலைதளம் மார்கன் படம் முதல் நாளில் ரூபாய் 85 லட்சங்கள் வரை வசூல் செய்திருக்கும் எனக் கூறுகிறது. அதே நேரத்தில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், படத்திற்கு வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையோடு உள்ளது. இன்றும் நாளையும் அதாவது ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக் கொண்டு உள்ளது. அதேநேரத்தில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வருவதால் அதன் தாக்கம் கட்டாயம் வசூலிலும் இருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











