twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிச்சைக்காரன் 'கோட்டா' விவகாரம்.... பாடல் வரியைத் திருத்தினார் விஜய் ஆன்டனி

    By Shankar
    |

    பிச்சைக்காரன் பாடலில் கோட்டா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், அந்த குறிப்பிட்ட வார்த்தை மாற்றப்பட்டுள்ளது என நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

    'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை, பிச்சைக்காரன் படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார். அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித் தகுதி இல்லாத சிலர், தன் பண பலத்தை உபயோகித்து, தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து, மருத்துவர்களாகி, நல்ல மருத்துவ சமுதாயத்துக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதைத்தான், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    Vijay Antony makes change in Pichaikaran lyric

    பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் இந்த பாடலை எழுதவில்லை. கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதனைப் படைத்தவர்கள்.

    ஒரு வரியை கொண்டு எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். பாடலை முழுமையாக கேட்டால்தான் பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, யாருக்காக எழுதப்பட்டது என்பது புரியும். இந்த பாடல் மூலம் சமுதாயத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளைத்தான் சொல்லுகிறோம். யாரையும் புண்படுத்தவில்லை.

    ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என 'சலீம்' திரைப்படம் மூலம் வாழ்ந்து காட்டியவன் நான்.

    பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், கோட்டா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'காசு கொடுத்து' என மாற்றிவிட்டோம்," என குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

    முன்னதாக "பிச்சைக்காரன்' திரைப்படத்தின் விளம்பர பாடல் வரிகள் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.

    பாடல் வரிகளில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வி பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்கள் தவறாக ஊசியைப் போட்டு நோயாளிகளைக் கொல்கிறார்கள் என்ற பொருளில் அமைந்துள்ள வரிகள் சமூக நீதிக்கு எதிரானது, என கூறியிருந்தனர்.

    English summary
    After the strong protest against using the word Quota in Pichaikaran song, Vijay Antony changed the word immediately.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X