Pookie: எனக்கும் ஒரு டிக்கெட் போடுங்க.. ரசிகையிடம் டிக்கெட் கேட்ட விஜய் ஆண்டனி.. X-இல் சுவாரஸ்யம்
சென்னை: விஜய் சேதுபதி தயாரித்து இசையமைத்து கடந்த வாரம் வெளியான படம் பூக்கி. படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் படத்தில் அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார் கணேஷ் சந்திரா. படம் இந்த கால இளசுகளுக்கு ஏற்றவகையில் அவர்களின் காதல் கதையைச் சொல்லும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் படத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்லும் வகையில் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவு ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, “வணக்கம். நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே நான் POOKIE பூக்கி என்ற ஒரு நல்ல படத்த புது talents வச்சு produce பண்ணி 2 days-க்கு முன்னால release பண்ணிருக்கேன். POOKIE பூக்கி ஒரு super படம் பாத்தவங்கட்ட கேளுங்க Miss பண்ணாம பாருங்க அப்புறம், ஒரு நல்ல படத்தை theatre-ல miss பண்ணிட்டோம்னு feel பண்ணாதிங்க நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
இவரது இந்த பதிவுக்கு ஜமுனா என்ற ரசிகர் ஒருவர் எனது பதிவுக்கு ரிப்ளை செய்தால் நான் நான் மூன்று பேரை படத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். உடனே விஜய் ஆண்டனி, ஹாய் ஜமுனா, நாலு டிக்கெட்டா எடுக்க முடியுமா? நானும் உங்களுடன் படம் பார்க்க வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த போஸ்ட் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

அஜய் தீஷனைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான் படமான மார்கன் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று கூற கூறலாம். அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின்னர், விஜய் ஆண்டனி சந்தித்த வெற்றி படம் என்றால் அது மார்கன் படம். இந்த படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த அஜய் தீஷன் இந்த படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்து அசத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











