பிச்சைக்காரன் 2 தொடர்பாக அணுகியபோது பிரியாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? மனம் திறந்த விஜய் ஆன்டனி!

சென்னை: பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சியாக இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமியை அணுகிய போது அவர் எப்படி ரியாக்ட் செய்தார் என்பது குறித்து இயக்குநர் விஜய் ஆண்டனி மனம் திறந்து பேசியுள்ளார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சாட்னா டைட்டஸ் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

பெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். இந்தப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சக்கைப் போடு போட்டது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

லாக்டவுன் நேர ஓய்வில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் கதையை எழுதினார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

சசி சார் பிஸி

சசி சார் பிஸி

பிச்சைக்காரன் 2 படத்தை பாரம் படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிச்சைக்காரன் 2 படத்தை சசி சார்தான் இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் ஹரிஷ் கல்யாண் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் பிஸியாக உள்ளார்.

சசி சார் பிஸி

சசி சார் பிஸி

பிச்சைக்காரன் 2 படத்தை பாரம் படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிச்சைக்காரன் 2 படத்தை சசி சார்தான் இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் ஹரிஷ் கல்யாண் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் பிஸியாக உள்ளார்.

தற்செயலாக நடந்தது..

தற்செயலாக நடந்தது..

2021ஆம் ஆண்டு பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ் செய்ய நினைப்பதால் வேறொரு இயக்குநருடன் செல்ல நினைத்தேன். இயக்குநர் பிரியா இந்த புராஜெக்டில் இணைந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று. எனக்கு பாரம் படம் பிடித்திருந்தது.

நான் உணர்ந்தேன்

நான் உணர்ந்தேன்

அந்தப் படத்தை பார்த்த பிறகு வாழ்த்த நான் அவரை அழைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு, என் திரைப்படத்திற்காக அவர் பயன்படுத்திக் கொண்டால் நல்லது என்று நான் உணர்ந்தேன். அவரது தொழில்நுட்ப அறிவு மற்றும் திரைப்படத் தயாரிப்பைப் பற்றிய தெளிவு எனக்கு மிகவும் பிடித்தது.

தெலுங்கு மொழியில்..

தெலுங்கு மொழியில்..

இப்படத்திற்காக இயக்குநர் பிரியாவை அப்ரோச் செய்த போது அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இது அவருக்கு ஒரு எதிர்பாராத ஆஃபர். அவர் பிச்சைக்காரன் படத்தை பார்த்துவிட்டு ஒப்புக்கொண்டார். இந்த படம் தெலுங்கிலும் உருவாக்கப்படுவதால், தெலுங்கு மொழியில் சிறந்த ஒருவரையும் எதிர்பார்த்தோம்.

பெரிய பட்ஜெட் படம்

பெரிய பட்ஜெட் படம்

பிரியாவுக்கு தாய் மொழி தெலுங்கு என்பதால் அவர் ரைட் சாய்ஸ் என்று உண்ர்ந்தேன். என்னுடைய பட்ஜெட்டில் இது பெரிய படம். ஸ்க்ரிப்ட் முழுவதும் முடிந்துவிட்டது, இப்போது டயலாக் பணியில் ஈடுபட்டுள்ளேன் என கூறியுள்ளார் விஜய் ஆன்டனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X