Vijay Antony: இனிமேல் பெரிய ஹீரோஸ்க்கு மியூசிக் பண்ணப் போறேன்.. விஜய் ஆண்டனி உறுதி!
சென்னை: இயக்குநர் எஸ்ஏசியின் சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.
தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே கேமியோ ரோலில் நடித்து தன்னுடைய நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டார்.

நான் படம் மூலம் கடந்த 2012ம் ஆண்டில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார்.
பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்க விஜய் ஆண்டனி திட்டம்: நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பன்முகம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. கடந்த 2005ல் சுக்ரன் என்ற படத்தில்தான் இவரது திரைப்பயணம் இசையமைப்பாளராக துவங்கியது. தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை படத்தில் கேமியோ ரோலில் நடித்து தன்னுடைய நடிப்பு ஆர்வத்தை அடுத்த ஆண்டிலேயே வெளிப்படுத்தினார். ஆனாலும் இசையமைப்பாளராக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிலேயே அதிகமான கவனத்தை செலுத்தினார்.

தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டில் விஜய் ஆண்டனியின் நான் படம் வெளியானது. இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டில் அவர் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார். ஆனால் ஒரே மாதிரியான ரியாக்ஷன் விஜய் ஆண்டனி கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, தான் ஒரு ஹீரோ என்றும் அதற்கான விஷயங்களை மட்டுமே தான் கொடுக்க முடியும் என்றும் தான் சிறப்பான நடிகன் இல்லை என்றும் கூறினார்.
ஹீரோவாக தான் நடிக்கும் படங்களின் இசையமைப்பையும் விஜய் ஆண்டனி செய்து வந்தார். அந்த அளவில் நல்ல நடிகரை பெற்றுள்ள திரையுலகம் இசையமைப்பாளரை இழந்துள்ளது. இதுகுறிருத்து ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 6ம் தேதி அவரது ரத்தம் படம் வெளியாகவுள்ள நிலையில், அதையொட்டி பேசிய அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, தொடர்ந்து நடிகரானதால் இசையமைப்பில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் நடிப்பில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும், கற்று கொள்ள வேண்டிய விஷயங்களும் அதிகமாக இருந்ததால், இசையமைப்பில் இருந்து விலகியிருந்ததாகவும் தற்போது சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தன்னுடைய இசைக் கச்சேரி, தனக்கான தன்னம்பிக்கையை மீண்டும் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடத்தப்பட்டுள்ள இசைக் கச்சேரி, இசையமைப்பாளராக தற்போதும் தன்னை ரசிகர்கள் அதிகமாக விரும்புவதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு பிஜிஎம் இல்லாமல் பின்னணி பாடல்களை மட்டும் எடுத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிப்பில் உள்ள நுணுக்கங்கள், பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை தான் ஓரளவுக்கு தெரிந்துள்ளதாகவும் அடுத்ததாக நடிப்பு, இசையமைப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்ததாக விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் அக்டோபர் 6ம் தேதி ரிலீசாகவுள்ளது. முன்னதாக அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் ரத்தம் படம் வெளியாகவுள்ளது. அடுத்ததாக ஹிட்லர் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நேற்றைய தினம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











