பிகிலி யாருன்னு புரியுதா...தீம் சாங்கில் தட்டி தூக்கிய விஜய் ஆன்டனி

சென்னை : BIKILI யாருன்னு சொல்லுறேன்னு சொல்லிட்டு, வேற லெவலில் மிரட்டலான ANTI BIKILI தீம் சாங்கை வெளியிட்டுள்ளார் விஜய் ஆன்டனி. இதை வைத்து நெட்டிசன்கள் மிகப் பெரிய ஆராய்ச்சியே நடத்தி வருகின்றனர்.

இதுவரை இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளராக இருந்த விஜய் ஆன்டனி, பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் டைரக்டராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை புரொமோட் செய்வதற்காக BIKILI, ANTI BIKILI யார் என கேட்டு கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவை திணறடித்து விட்டார்.

ANTI BIKILI தீம் சாங்

ANTI BIKILI தீம் சாங்

ஒரு வழியாக ANTI BIKILI தான் தான் என சமீபத்தில் வெளியிட்ட விஜய் ஆன்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் ANTI BIKILI யாக வருவதாக கூறினார். ANTI BIKILI தீம் சாங் இன்று வெளியிடப்படும் என அறிவித்த விஜய் ஆன்டனி, இதயம் பலவீனமானவர்கள் சவுண்ட் கம்மியாக வைத்து இதை கேளுங்க ப்ளீஸ் என கேட்டு ட்வீட் செய்திருந்தார். இதை பல வரவேற்றாலும், சிலர் ஓவர் பில்டப் என கூறி கலாய்த்தனர்.

தீம் சாங்கே மிரட்டுதே

தீம் சாங்கே மிரட்டுதே

ஆனால் உண்மையாகவே மிரட்டலான ஒரு தீம் சாங்கை வெளியிட்டுள்ளார் விஜய் ஆன்டனி. காஸ்ட்லி காரில் பணக்காரனாக வந்திறங்கும் விஜய் ஆன்டனி, மேக்கப் போட்டு, பிச்சைக்காரனாக கெட்அப்பில் ஆட்டோவில் பிச்சை எடுக்க செல்கிறார். அதைத் தொடர்ந்து மண்டை ஓடுகள் குவிக்கப்பட்டு, அதில் ஆங்காங்கே BIKILI என எழுதப்பட்டு, காளி உருவம். பிறகு கருப்பு உடையில் கண்கள் மட்டும் தெரிய, முகத்தை மறைத்தபடி கையில் ரத்தம் சொட்ட கெத்தாக வந்து நிற்கும் மற்றொரு உருவம் என காட்டுகிறார்கள்.

வரலாற்றை மாற்றி எழுத வருகிறான்

வரலாற்றை மாற்றி எழுத வருகிறான்

வரலாறு பணக்காரர்களால் எழுதப்படுகிறது. ஏழைகளின் வலி அவர்களுக்கு தெரியாது. வரலாற்றை மாற்றி எழுத வருகிறான்...பிச்சைக்காரன் 2 என இடையிடையே காட்டப்படுகிறது. மிரட்டலான இசை, காட்சிகளுடன் இந்த தீம் சாங் அமைக்கப்பட்டுள்ளது. தீம் சாங்கின் துவக்கத்திலேயே, போ...போ...நீ செய்த புண்ணியம் வாழ்க்கையில் நீ தேடுவதை பெற்று தரும் என்ற வாசகத்தோடு ஆரம்பிக்கிறார்கள்.பிச்சைக்காரன் படத்தில் வரும் அதே, ஓம் பூர் புவஸ்வஹ என காயத்ரி மந்திரத்தில் துவங்கி, சம்பவாமி யுகே யுகே என பகவத் கீதை வரியுடன் வித்தியாசமாக பாடலை அமைத்துள்ளனர். இந்த தீம் சாங்கிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

இதுதான் பிச்சைக்காரன் 2 கதையா

இதுதான் பிச்சைக்காரன் 2 கதையா

இந்த தீம் சாங்வை வைத்து பார்க்கும் போது பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆன்டனி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இருப்பவர்களிடம் இருந்து கொள்ளை அடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் BIKILI கேரக்டர். அதற்கு நேர் எதிரொன ANTI BIKILI கேரக்டர். பிச்சைக்காரன் 2 படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது ஆகியன தெளிவாகி உள்ளது. இந்த தீம் சாங் படத்தின் கதை என்னவாக இருக்கும், பிச்சைக்காரன் படத்தில் பாசம், பிச்சைக்காரர்கள் பற்றி சொன்னதை போல் இதில் என்ன மெசேஜ் சொல்ல போகிறார்கள் என அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X