டூரிங் டாக்கீஸ்: இளையராஜா இசையில் பாடிய விஜய் ஆன்டனி!
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கும் படத்துக்காக இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி.
எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘டூரிங் டாக்கிஸ்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதுவரை 68 படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் 69-வது படமாக டூரிங் டாக்கீசை இயக்கி வருகிறார்.

எஸ் ஏசி அறிவிப்பு
இந்தப் படத்துக்குப் பிறகு படங்களை இயக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் எஸ்ஏசி என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயது முதியவராக
இப்படத்தில் 3 கதைகளை ஒருங்கிணைத்து முழு படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது முதியவராகவும் நடிக்கவுள்ளார்.

இளையராஜா
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு ‘டூரிங் டாக்கிஸ்' படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர்.

விஜய் ஆன்டனி
இந்தப் படத்தின் விசேஷமாக இளையராஜா இசையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஒரு பாட்டு பாடியுள்ளார். இளையராஜாவின் தீவிர ரசிகர் விஜய் ஆன்டனி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











