5 முறை காதல் தோல்வி.. ரோமியோ விஜய் ஆண்டனி வாழ்க்கையில் இவ்வளவு சோகங்கள் வந்திருக்கா

சென்னை: விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். இசையமைப்பாளராக மட்டும் வலம் வந்துகொண்டிருந்த அவர் நான் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர் தற்போது ஹிட்லர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தி ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் தனது வாழ்க்கையில் ஐந்து முறை காதல் தோல்வி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

Vijay Antony Reveals about his 5 Love Failures

ஹீரோவான விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.

இயக்குநரான விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங்போதுதான் விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீள முடியாத துயரம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்ட அவருக்கு மீள முடியாத துயரமாக அமைந்தது அவரது மகள் மீராவின் மரணம். ஏதோ காரணத்தால் கடந்த வருடம் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் காரணமாக விஜய் ஆண்டனி உடைந்தே போய்விட்டார். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஹிட்லர் படத்தில் நடித்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் கொலை படம் வெளியானது.

கலவையான விமர்சனம்: இப்போது அவர் ரோமியோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. முக்கியமாக விஜய் ஆண்டனியின் நடிப்பு மெருகேறியிருந்தாலும் படத்தின் மேக்கிங்கில் ஒன்றுமே இல்லை என்று ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் இது அவரது ஹிட் லிஸ்ட்டில் இடம்பெறவில்லை என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் ஓடுகின்றன.

5 காதல் தோல்விகள்: இந்நிலையில் தனது காதல் தோல்விகள் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, "நான் ஐந்து முறை காதலில் தோல்வி அடைந்திருக்கின்றேன். ஆறாவது முறையாக காதலித்த பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். எனது எளிமையான வாழ்க்கை முறைதான் ஐந்து காதல் தோல்விகளை சந்தித்ததற்கு காரணம். நான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் வளர்ந்திருக்கிறேன். வளர்க்கப்பட்டேன். எனது எளிமையும், வாழ்க்கை முறையும் பெண்களுக்கு பிடிக்கவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X