twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரென கேட்ட ப்ரோகாமர் - இயக்குனர் ட்வீட்

    |

    சென்னை: விஜய் ஆண்டனி, அருண் விஜய் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் அக்னி சிறகுகள்.

    மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடராஜன் இசையமைக்கிறார்.

    கடும் மனஅழுத்தத்தில் போனி கபூர்...அப்படி என்ன தான் நடந்தது ? கடும் மனஅழுத்தத்தில் போனி கபூர்...அப்படி என்ன தான் நடந்தது ?

    அக்‌ஷரா ஹாசன், சம்பத், J சதீஷ்குமார், ரைமா சேனா செண்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    ஆர்வத்துடன் ரசிகர்கள்

    ஆர்வத்துடன் ரசிகர்கள்

    மூடர் கூடம் திரைப்படம் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஆகும். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவீன் இயக்கும் திரைப்படம் அக்னி சிறகுகள். இதனால் இந்த படத்தின் மேல் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

    பெரிய பட்ஜெட்

    பெரிய பட்ஜெட்

    மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் த்ரில்லர்ராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகில் வித்தியாசமான பல லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் சில முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.

    வைரலான செல்ஃபி

    வைரலான செல்ஃபி

    இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே கொல்கத்தாவில் நிறைவு பெற்றது. அந்த அறிவிப்புடன் படக்குழு வெளியிட்ட செல்ஃபி வைரலானது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டு வருகிறது.

    ப்ரோகாமர் கேள்வி

    ப்ரோகாமர் கேள்வி

    இந்த படத்தின் பின்னணி இசை அமைப்பிற்கான பணியில் Zoom வழியாக இயக்குனர், இசையமைப்பாளர், கீபோர்ட் ப்ரோகாமர் இணைப்பில் இருக்கும் போது முதல் ரீலில் தாடியுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரென கேட்டுள்ளார் ப்ரோகாமர். இது குறித்து இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Vijay Antony's Agni Siragugal all set to rock Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X