தெறிக்கும் பாடலை பாடி மாஸ் பாடகரானார் கௌதம் மேனன்… இணையத்தில் டிரெண்டாகும் சாங்!

சென்னை : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.

கோடியில் ஒருவன் திரைப்பட வரும் ஸ்லம் ஆனத்தம் என்ற பாடலை கௌதம் மேனன் விஜய் ஆண்டனி, பிரேம்ஜி ஆகியோருடன் இணைந்து பாடி உள்ளனர்.

இப்பாடல் வலைத்தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளை வெற்று வைரலாகி உள்ளது.

கதைகளை தேர்வு செய்து

கதைகளை தேர்வு செய்து

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி பல்வேறு வித்தியாசமான கதைகளை கையில் எடுத்து நடித்து வருகிறார். நான், சலீம், பிச்சைக்காரன், காளி, கொலைகாரன் என ஒவ்வொரு படத்திலும் ஒரு மாற்றம் இருக்கும். இதனால் விஜய் ஆண்டனிக்கு என்று நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி , பிச்சைக்காரன்2 என வரிசையாக பல திரைப்படங்களை விஜய் ஆண்டனி தன் கைவசம் வைத்துள்ளார்.

கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படம் கோடியில் ஒருவன். இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். ராமச்ந்திர ராஜு, பிரபாகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பாடகர் அவதாரம்

பாடகர் அவதாரம்

வெளியீட்டுக்கு தயாராக உள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஸ்லம் ஆனத்தம் என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய் ஆண்டனி, பிரேம்ஜி மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

3படங்கள்

இயக்குனராக மின்னிக் கொண்டு இருந்த கௌதம் மேனன் தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஜோஸ்வா இமை போல்காக்க, துருவநட்சத்திரம்,நதிகளில் நீராடும் சூரியன் 3படங்களைஇயக்கி வருகிறார். மேலும், நவரசா என்ற இணையத் தொடரையும் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X