'கொலைகாரன்' ஆகும் விஜய் ஆண்டனி... அர்ஜூன் கூட்டாளியா? வில்லனா?
விஜய் ஆண்டனி - அர்ஜூன் இணையும் கொலைகாரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சென்னை: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து கொலைகாரன் எனும் படத்தில் நடிக்கின்றனர்.
தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிக்கும் படம் கொலைகாரன். ஆண்ட்ரு லூயிஸ் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று எளிமையாக நடைபெற்றது. இயக்குனர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தை துவக்கி வைத்தார்.
இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனியும், அர்ஜூனும் முதல் முறையாக இணைகின்றனர். இரும்புத்திரை படம் போன்று, இந்த படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார் என தெரிகிறுது.

Comments
vijay antony arjun kolaikaran shooting tamil cinema விஜய் ஆண்டனி அர்ஜூன் கொலைகாரன் பட பூஜை தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications