அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!

By Shankar

தமிழ் சினிமாவில் தலைப்பு சிக்கல் எப்போதுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாராவது ஒரு பிரபல தலைவர் பெயரை வைப்பார்கள்... உடனே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பும். பின்னர் அதற்கு முன்னும் பின்னும் ஏதாவது வார்த்தைகள் சேர்த்து வெளியிடுவார்கள், தெய்வமகன், தெய்வத் திருமகள் ஆன மாதிரி.

இப்போது விஜய் ஆன்டனி அப்படியொரு சிக்கலான தலைப்பைத் தேர்வு செய்துள்ளார். அது அண்ணாதுரை. பேரறிஞர் என்று புகழப்படும் அண்ணாவின் முழுப் பெயர் இதுதான். ஏற்கெனவே எங்கள் அண்ணா என்ற தலைப்பு இருந்தாலும், இப்போது நேரடியாக அண்ணாதுரை பெயரையே பயன்படுத்தியுள்ளார்.

Vijay Antony's new movie titled Annadurai

புதுமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்கத்தில விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் இது.

தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான 'அண்ணாதுரை' யின் பெயரை விஜய் ஆன்டனி பயன்படுத்துவது என்னென்ன சர்ச்சைகளை உண்டாக்கப் போகிறதோ தெரியவில்லை.

'ஐ பிச்சர்ஸ்' சார்பில் ஆர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் படத்தைத் தயாரிக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளராகப் பணியாற்றியவர்.

"விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், 'ஐ பிச்சர்ஸ்' போன்ற மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன். இன்னும் ஒரு வாரத்தில் 'அண்ணாதுரை' படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்," என்கிறார் ஸ்ரீனுவாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X