பிச்சைக்காரன் 2 தானா? தனது பிறந்த நாளில்.. ஆச்சரிய அறிவிப்பை வெளியிடுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி!

By

சென்னை: விஜய் ஆண்டனியின் அடுத்தப் பட அறிவிப்பு, அவர் பிறந்த நாளான வரும் 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

Recommended Video

Bigg Boss 4 இந்த 2020 ல் நடக்குமா? • Kamal Hassan

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்தியவர் விஜய் ஆண்டனி.

2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படம், ஆந்திராவிலும் பல புதிய சாதனைகளை படைத்தது.

விஜய் ஆண்டனி பிறந்த நாள்

விஜய் ஆண்டனி பிறந்த நாள்

இதனால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களால் விரும்பப்படுபவர் ஆகி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது ஒவ்வொரு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். வரும் 24 ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள். இதையடுத்து அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆண்டனியின் சொந்த பட நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள், கோவிந்த மூர்த்தி உட்பட பலர் நடித்த படம், பிச்சைக்காரன். சசி இயக்கிய இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனிக்கு பெரிய வியாபார மார்க்கெட்டை உருவாக்கிய இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

அடுத்த பாகம்

அடுத்த பாகம்

இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக விஜய் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன், தெரிவித்திருந்தார். கடந்த சில மாதமாக இதன் ஸ்கிரிப்டை எழுதி வருவதாகவும் முதல் பாகத்தை இயக்கிய சசி மற்றப் படங்களில் பிசியாக இருப்பதால், இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அற்புதமான ஆண்டு

அற்புதமான ஆண்டு

இந்நிலையில், அந்தப் படத்தின் அறிவிப்பாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, ' 2021ஆம் ஆண்டு சினிமாவுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. நேர் மறையான கருத்துக்களையே என் படங்களில் வலியுறுத்துவது வழக்கம். இந்தப் படமும் அப்படியே.

கண்டிப்பாக ஆச்சரியம்

கண்டிப்பாக ஆச்சரியம்

படத்தை இயக்குவது குறித்து மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்த அறிவிப்பு கண்டிப்பாக ஆச்சரியம் மிக்கதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்' என்று தெரிவித்துள்ளார். அவர், இப்போது, 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X