பிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் !
சென்னை : நேற்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தனது பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டரை வெளியிட்டு அனைவருக்கும் டபுள் ட்ரீட் அளித்திருந்தார் விஜய் ஆண்டனி.
இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி தமிழில் வெற்றி நடை போட்ட நிலையில் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் கூட்டம் இந்த படத்தின் மூலம் பெருகியது.
இவ்வாறு பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிடப்பட்ட பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில், இந்த போஸ்டர் சூர்யாவின் பிரபல படத்தின் போஸ்டரில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

நிரந்தரமான இடத்தை
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பெற்று இசையமைப்பாளராகவும், நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் இன்றுவரை வெற்றி வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

புது இயக்குனர்களுடன்
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என பல புது இயக்குனர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி தற்பொழுது தேசிய விருது பெற்ற பாரம் படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தேசிய விருது
சென்ற ஆண்டு தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படத் துறையை பெருமைப்படுத்தும் விதமாக "பாரம்" திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தலைக்கு ஊத்தல்
பல சிறந்த படங்கள் சென்ற ஆண்டு வெளியாகி இருந்த போதிலும் பாரம் திரைப்படம் ஒரு கிராமத்தில் நடக்கும் "தலைக்கு ஊத்தல்" என்ற சமூக அவலங்களை தத்ரூபமான காட்சிகளால் நிரப்பப்பட்டு சமூகத்தில் பல காலமாக இருந்து வரும் இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலை எடுத்துச் சொல்லும் விதமாக வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

பிச்சைக்காரன் 2
இவ்வாறு முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியா கிருஷ்ணசுவாமி தற்பொழுது விஜய் ஆண்டனியை வைத்து பிச்சைக்காரன்2 திரைப்படத்தை இயக்க உள்ளார். பிச்சைக்காரன் பாகம் 1 இயக்குனர் சசி இயக்கி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 கண்டிப்பாக வரும் எனவும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை
இந்நிலையில் நேற்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தான் நடிக்கும் அடுத்த படமான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

தானா சேர்ந்த கூட்டம்
இவ்வாறு கிளாஸியான போஸ்டராக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் போஸ்டர், சூர்யா மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

அனைத்தும் அப்பட்டமாக
விஜய் ஆண்டனி முதுகை காட்டியவாறு தனக்கு முன் நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களை பார்த்துக்கொண்டு நிற்கும் இந்த போஸ்டரில் மக்களாக காட்டப்பட்டுள்ள முகங்கள் அனைத்தும் அப்பட்டமாக தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் போஸ்டரில் இருந்து எடுத்துள்ளனர்.

போஸ்டரே காப்பியாடா
பார்த்தவுடனேயே அனைவரும் மிக எளிதில் இது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர் காட்சிதான் என கணிக்கக் கூடிய வகையில் இருந்த இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் பலராலும் கேலிக் கிண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு அடப்பாவிகளா முதல் போஸ்டரே( ஆரம்பமே) காப்பியாடா எனக் கூறி வருகின்றனர்.
Recommended Video

இயக்குனர் மீது நம்பிக்கை
போஸ்டரே இப்படின்னா அப்போ படம் எந்த மாதிரி இருக்கும், என நெட்டிசன்கள் பலரும் கூறி வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ப்ரியா கிருஷ்ணசுவாமி பலருக்கும் நல்ல திரைப்படத்தை கொடுப்பவர் என்ற நம்பிக்கை ஊட்டும் நபராக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











