Pichaikkaran 2 :பிச்சைக்காரன் 2 படம் இதுவரை செய்துள்ள வசூல்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியாகியுள்ள படம் பிச்சைக்காரன் 2.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி விஜய் ஆண்டனி கேரியரில் சிறப்பாக அமைந்த பிச்சைக்காரன் படதின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படம் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் அம்மா சென்டிமெண்ட் கதைக்களமாக அமைந்திருந்த நிலையில், தற்போது அண்ணன் -தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து பிச்சைக்காரன் 2 படம் வெளியாகியுள்ளது.

30 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய பிச்சைக்காரன் 2 :
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் பிச்சைக்காரன். விபத்தில் சாகக்கிடக்கும் தன்னுடைய தாயின் உயிரை மீட்பதற்காக பிச்சைக்காரன் அவதாரம் எடுக்கும் ஹீரோவை மையமாக கொண்டு வெளியானது பிச்சைக்காரன். இந்தப் படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களை அதிகமாக கட்டிப் போட்டது. படத்தின் திரைக்கதை, பாடல்கள் என அனைத்தையும் சிறப்பாக கொடுத்திருந்தார் இயக்குநர் சசி.
தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த வாரத்தில் பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் பிச்சகாடு 2 என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் வசூல் சாதனை செய்ய தவறவில்லை. இந்தப் படத்தின்மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

இந்தப் படம் துவங்கியதிலிருந்தே விஜய் ஆண்டனி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். இடையில் மலேசியாவில் படத்தின் சூட்டிங் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்குள்ளானார். தொடர்ந்து கதை திருட்டு எனக் கூறி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு, பின்னர், வழக்கையும் சந்தித்தார். இதையடுத்து கடந்த வாரத்தில் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் அம்மா சென்டிமெண்டை மையமாக கொண்டு படம் வெளியான நிலையில், இரண்டாவது பாகத்தின் கதை முற்றிலும் மாறுபட்டு, அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக விஜய் ஆண்டனி அறிமுகமாகியுள்ள நிலையில், அவர் ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் கடந்த 8 நாட்களில் இந்தப் படம் வசூல் சாதனை புரிந்துள்ளது.
கடந்த 8 நாட்களில் இந்தப் படம் சர்வதேச அளவில் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே வார இறுதி நாட்களையும் சேர்த்து இன்னும் வரக்கூடிய நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டிவரும் விஜய் ஆண்டனி, இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது முதல் முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











