Pichaikkaran 2 :தங்கைக்காக பிச்சை.. வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் அடுத்தப்பாடல்!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி இயக்கம் மற்றும் நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடல் பிகிலி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது கோயில் சிலையே என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாடலை அருண் பாரதி எழுதியுள்ள நிலையில், தன்னுடைய தங்கையை மனதில் கொண்டு இந்தப் பாடலை எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Antonys Pichaikkaran 2 movie video song released and trending in Youtube

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் :நடிகர் விஜய் ஆண்டனி லீட் கேரக்டரில் நடித்து வெளியான பிச்சைக்காரன் படம் மிகச்சிறந்த வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்த நிலையில், பெரிய பணக்காரன் தன்னுடைய அம்மாவிற்காக பிச்சைக்காரனாக 48 நாட்கள் மாறுவதை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. படத்தின் பாடல்களும் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்த நிலையில், படம் விஜய் ஆண்டனி கேரியரில் பெஸ்டாக அமைந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தானே இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. மலேசியாவில் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், விஜய் ஆண்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கினார்.இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார்.

Vijay Antonys Pichaikkaran 2 movie video song released and trending in Youtube

படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பிகிலி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது கோயில் சிலையே என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அண்ணன் -தங்கை பாசத்தை வலியுறுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை கவிஞர் அருண் பாரதி எழுதியுள்ளார். தன்னுடைய தங்கையை மனதில் கொண்டு இந்தப் பாடலை தான் எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரும் விபத்து ஒன்றில் இறக்க, தன்னுடைய தங்கையை காப்பாற்றும் பொருட்டு பிச்சை எடுக்கும் சிறுவனை இந்தப் பாடல் வெளிப்படுத்தியுள்ளது. தன்னுடைய தங்கைக்கு தான் இன்னொரு தாயாக இருப்பேன் என்ற வரிகள் இந்தப் பாடலின் ஹைலைட்டாக காணப்படுகிறது. வீடியோ பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடலின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியாகி சில மணிநேரங்களே ஆன நிலையில் யூடியூபில் பாடல் 7வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Vijay Antonys Pichaikkaran 2 movie video song released and trending in Youtube

இதனிடையே, தங்களது ஆய்வுக்கூடம் படத்தை காப்பியடித்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி எடுத்துள்ளதாகவும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாங்காடு மூவிஸ் என்ற நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இதையடுத்து படம் அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X