விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு மறைமுக பதிலடி கொடுத்தாரா விஜய் ஆண்டனி? ஷார்ப்பான ஸ்பீச்சா இருக்குதாம்

சென்னை: சாலிகிராமத்தில் தனது வாக்குகளை செலுத்திய பின்னால் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி இந்த முறை வாக்குப்பதிவு அதிகமாக உள்ளது குறித்து தனது கருத்தை தெரிவித்தார் தொடர்ந்து அவர் மக்கள் மற்றும் அரசுக்கு இருக்கக்கூடிய பொறுப்பு எடுத்து பேசுகிறேன் பல சுவாரசியமான தகவல்கள் பகிர்ந்து கொண்டார்.

மக்கள் அதிகமாக செலுத்தினார்கள் இது ஒவ்வொரு முறையும் அதிகரித்துக் கொண்டே வருவது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது மக்கள் வாக்களித்து ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அரசியலிலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரீ டேக் என்பது இருக்கிறது. எல்லாத்துறையும் மிகவும் சவாலான கடினமான துறை தான். பொதுமக்களுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்று தான், வெளிநாடுகளில் பல நாடுகளில் போர், பொறாமை, சண்டை பிரச்சனை என்று ஏதாவது ஒன்று இருந்து கொண்டே உள்ளது.

Vijay Antony s Sharp Remarks Spark Debate Indirect Reply to Vijay

ஆனால் இந்தியாவில் அப்படி கிடையாது, எங்காவது ஒரு சில இடத்தில் சில குற்றங்கள் நிகழ்வதற்கு நாம் ஒரு அரசை மொத்தமாக காரணம் காட்ட முடியாது. நாம் எங்கு இருந்த தவறு நடந்தாலும், அரசை காரணம் காட்டி பழகி விட்டோம் ஆனால் நாம் நம்மை பார்த்துக் கொள்வது போல நமது வீட்டை பார்த்துக் கொள்வது போல நமது வீதியை பார்த்துக் கொள்வது போல பொறுப்பு இருக்கிறது. மக்களால் தான் ஒரு அரசு செயல்படுகிறது. மக்கள் தான் அந்த அரசை நடத்துகிறார்கள். ஒரு அரசாங்கத்தை மக்கள் நடத்துவதற்கு அரசு உதவியாக இருக்கிறது அவ்வளவுதான். நாட்டை நன்றாக வைத்துக் கொள்வதில் மக்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. எல்லாவற்றிக்கும் அரசியல் காரணம் காட்டுவது சரியான ஒன்று இல்லை.

தமிழ்நாடு சிறப்பு: நான் பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறேன், இந்திய அரசு, குறிப்பாக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கு பின்னர் அமையும் அரசும் அதைத்தான் செய்யும், வருபவர்களும் அதைத்தான் செய்வார்கள். நீண்ட நாட்களாகவே அரசாங்கத்தை மிக நல்லபடியாக தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து யார் வந்தாலும் அவர்கள் நல்லபடியாக அரசை நடத்துவார்கள் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Vijay Antony s Sharp Remarks Spark Debate Indirect Reply to Vijay
Photo Credit:

விஜய்க்கு எதிரான கருத்தா?: விஜய் ஆண்டனி இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து நேரடியாகவே, விஜயின் கருத்துகளுக்கு எதிரானது என்று இணையவாசிகள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது கட்சியின் முதல் மாநாட்டில் இருந்து திமுக எதிர்ப்பு என்பது மட்டுமே இந்த தேர்தல் பரப்புரை வரை அவரது அரசியல் நடவடிக்கையாக இருந்தது. விஜய் பாஜகவை மூர்க்கமாக எதிர்க்கவில்லை என்ற விமர்சனம் அரசியல் தரத்தை முன்வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை இழப்பாட்டி மட்டுமே விஜய் தனது அரசியலை சுருக்கிக் கொண்டதால் அதைத்தான் விஜய் ஆண்டனி மறைமுகமாக தனது பாணியில் விமர்சித்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X