விஜய் ஆண்டனியின் படம் மூலம் நடிகராகும் பிரபல இயக்குனரின் மகன்!
விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடிக்கும் தமிழரசன் படத்தின் படிப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார்.
சென்னை : இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் நடிக்கும் விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் படிப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார்.
எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் தமிழரசன். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நேற்று இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார். விஜய் ஆண்டனியும் பிரணவும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, "இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்" என்று வாழ்த்தினார்.

ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே டிக் டிக் டிக் படத்தில் நடிகராக களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது தமிழரசன் மூலம் பிரணவ் மோகன் களம் காணுகிறார்.


Click it and Unblock the Notifications











