அடேங்கப்பா.... 'தமிழரசன்' லிஸ்ட பார்த்தா சூப்பர் டீலக்ஸ் கூட கொஞ்சம் கம்மி தான்!
தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை: விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் நடிக்கிறார். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.


தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 3வது கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதுவும் துரிதமாக நடைபெற்று முடிவடையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பிறகு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்து, வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகும் படங்களில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதுபோல் தான் தமிழரசன் படத்தின் நட்சத்திரப் பட்டியலும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











