விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பண்டிகைக்கு தரமான சம்பவம்!

சென்னை : விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சசி இயக்கத்தில் 2016ம்ஆண்டு வெளியானத் திரைப்படம் பிச்சைக்காரன், இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்து, இசையமைத்து இருந்தார் விஜய் ஆண்டனி.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி உள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல திறமைகளைக் கொண்ட விஜய் ஆண்டனி நான், சலீம்,சைத்தான் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். உயிருக்கு போராடும் அம்மாவின் உயிரை காப்பாற்ற பிச்சைக்காரனாக மாறி பெண்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. படம் அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடி பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டியது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

பிச்சைக்காரன் படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனநிலையில், பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்க இருப்பதாக விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது, ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார். கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில்,தமிழ் புத்தாண்டு அன்று அதாவது ஏப்ரல் 14ந் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றி உள்ளது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 3.45 நிமிட ஓடக்கூடிய இந்த வீடியோவில்,மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜான் விஜய், ஹரீஷ் பேராடி, ஒய்ஜி மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X