அட பர்ஸ்ட் லுக்கே சும்மா மெர்சலா இருக்கே.. கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் போஸ்டர்!

சென்னை : விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளி மயில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும்,ஹீரோவாகவும் நடித்து அதில் வெற்றியும் பெற்று ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி. சற்று ஸ்டைலிஷான குத்துப் பாடல்களும் மெலடிப் பாடல்களும் தனித்துவமான ஸ்டைலை நுழைந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் வள்ளிமயில்

விஜய் ஆண்டனியின் வள்ளிமயில்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் வள்ளி மயில் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ், ஃபரியா அப்துல்லா மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வள்ளி மயில் படத்தில், தெலுங்கு நடிகர் சுனில், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி நிஷா மற்றும் யூட்யூப் பிரபலமான GP.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் வள்ளி மயில் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வள்ளி மயில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் சத்யராஜ் மற்றும் விஜய் ஆண்டனி இருக்க, ஒரு பெண் தலையில் முந்தானையை போற்றியபடி நிற்கிறாள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

பிரம்மாண்டமான செட்

பிரம்மாண்டமான செட்

80 களில் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய 'வள்ளி திருமணம்' நாடகத்தைப் மையமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், 1980ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல கதை இருப்பதால், சுமார் 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் 80களில் திண்டுக்கல் எப்படி இருந்ததோ அதை கண் முன் கொண்டு வரும் வகையில் செட் போடப்பட்டுள்ளது. இதனால் வள்ளிமயில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

விஜய் ஆண்டனி ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். காக்கி, தமிழரசன், அக்னிச் சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வெளியாக உள்ளன. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தின் டீசர்அண்மையில வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், சதிஷ் குமார், ரமீனா சென், சென்றாயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X