ப்ளூ சட்டை மாறன் பாவம் விட்ருங்க.. திடீரென சொன்ன விஜய் ஆண்டனி.. இளையராஜா மேட்டருக்கும் பதில்!
சென்னை: விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். கோலி சோடா, 10 என்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ள நிலையில், இன்று இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மழை பிடிக்காத மனிதன் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய சத்யராஜ் மோடி பயோபிக் குறித்து கிண்டலாக பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணிவண்ணன் இருந்திருந்தால் அவர் இயக்கத்தில் மோடி பயோபிக்கில் தான் தாராளமாக நடிப்பேன் என்றும் இப்போதைக்கு இருக்கும் இயக்குனர்கள் என்றால் வெற்றிமாறன், பா. ரஞ்சித் அல்லது மாரி செல்வராஜ் இயக்கினால் நடிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி அவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது ப்ளூ சட்டை மாறன் அவரது வேலையை தான் செய்கிறார் பாவம் விட்டு விடுங்கள் என பேசியுள்ளார்.
விஜய் ஆண்டனி vs ப்ளூ சட்டை மாறன்: விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ரோமியோ திரைப்படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. அந்தப் படத்தை கடுமையாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்த நிலையில், அவருக்கு எதிராக விஜய் ஆண்டனி போட்டப் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அன்பே சிவம் படத்தை போல ரோமியோ படத்தை ஆக்கிடாதீங்க என விஜய் ஆண்டனி ட்வீட் போட்டு இருந்தார். அதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் ரோமியோவும் அன்பே சிவம் படமும் ஒன்றா என மீண்டும் கலாய்த்தார்.
வேணா விட்ருங்க: மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நிச்சயம் விஜய் ஆண்டனிக்கு படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது ப்ளூ சட்டை மாறன் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, "அவர் பாவம் நல்லவரு விட்ருங்க, அவர் தனது வேலையை செய்கிறார். நாம நம்ம வேலையை செய்வோம்.. அவர் அப்படி நெகட்டிவா பேசலைன்னா அவர் வீடியோவை நீங்க பார்ப்பீர்களா" என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
இளையராஜா பிரச்சனை: எக்கோ எனும் இசை நிறுவனத்தை இளையராஜா வைத்திருந்த நிலையில் பல படங்களின் உரிமையை அவர் பெற்றுள்ளார். அதற்காகத்தான் அவர் உரிமைத் தொகை கேட்கிறார். நானும் பிச்சைக்காரன் 2 படத்தின் இசை உரிமையை பெற்று இருக்கிறேன். கண்டிப்பாக ஒருவர் இசையை பயன்படுத்துவதற்கு முன்பாக அவரது அனுமதியை பெற்றாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பல படங்கள் கிடப்பில்: விஜய் ஆண்டனி வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த நிறைய படங்கள் வெளியாகாமல் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. வெளியாகும் படங்களும் ஓடுவதில்லை. ஆனால், தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டே இருக்கிறார். அக்னி சிறகுகள், ஹிட்லர், வள்ளி மயில், காக்கி உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் உருவாகி வருகின்றன. மழை பிடிக்காத மனிதன் படத்தில் முன்னதாக விஜயகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவருக்கு பதிலாக சரத்குமார் அந்த ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











