விஜய் சார் சும்மா விடமாட்டாரு.. கண்ணீருடன் பேசிய பெண்ணின் வீடியோவை ஷேர் செய்த விஜய் ஆண்டனி
சென்னை: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது, இந்த இரண்டு மாதத்தில் அவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பலரது கவனத்தை ஈர்த்த திட்டம் என்றால் அது சிங்கப்பெண் அதிரடிப்படைத் திட்டம் தான். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு பாதுகாப்பு கேட்டு போன் செய்தும் காவல்துறை தரப்பில் இருந்து பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று கண்ணீருடனும், பயத்துடனும் பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோவை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்த வீடியோவில் உள்ள பெண் அழுது கொண்டே பேசுபவதாவது, " நானும் தவெகவைச் சேர்ந்த பெண் தான். சேலத்தில் TVK சசி அக்கா என்றால் பலருக்கும் தெரியும். நான் எனது அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறேன். எனது மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் எனது மகளின் கணவர் என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்.
விசாரணைக்கு வராத காவல்துறை: கேவலமாக பேசுகிறார். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு போன் செய்தோம். அவர்கள் மூலம் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை எங்க வீட்டிற்கு வந்து விசாரணை கூட செய்யவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் உங்க பெண் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

முதலமைச்சர் விஜய் சாருக்கு: நான் தவெகவில் இருக்கிறேன், விஜய் சார் பெண்களுக்கு ஏதாவது என்றால் சும்மா விடமாட்டார் என்று எனக்குத் தெரியும். இந்த வீடியோவை விஜய் சார் பார்க்கும் வரை ஷேர் செய்யுங்கள் என்று அழுது கொண்டே பேசி உள்ளார். ஒரு பெண் இவ்வாறு அழுது கொண்டு பேசும் வீடியோவை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தவெகவைச் சேர்ந்த பலரும் அந்த பெண்ணிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலர் காவல்துறை நேரில் சென்றாவது விசாரித்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications