ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரியை நானா கெடுத்தேன்.. பெண் யூடியூபரை விளாசிய விஜய் ஆண்டனி.. என்ன ஆச்சு?
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடி மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதில் அரசியல் மற்றும் சில இசையமைப்பாளர்களின் சதிச்செயல் இருப்பதாக தனியார் யூடியூப் சேனலில் ஒரு பெண் தொகுப்பாளினி பேசிய வீடியோ சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அதில், தனது பெயர் இடம்பெற்ற நிலையில், டென்ஷனான இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அந்த பெண் மீதும் யூடியூப் சேனல் மீதும் மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அதிரடியாக அறிவித்து தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

போலி டிக்கெட்டுகள்: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததற்கு காரணமும் டிக்கெட் வாங்கியவர்களுக்கு இடமில்லாமல், ஏற்கனவே ஒரு கூட்டம் உள்ளே அமர்ந்திருந்தது தான் அந்த பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு பிரபல கட்சியை சேர்ந்த சிலர் தான் இந்த வேலையை பார்த்து போலி டிக்கெட்டுகளை அடித்து ஏ.ஆர். ரஹ்மான் பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளனர் என அந்த யூடியூப் சேனலில் பேசிய தொகுப்பாளினி குற்றம் சாட்டியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி ஆடியோ: அதில், இந்த மிகப்பெரிய ஸ்கேம் என சொல்லப்படக் கூடிய ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காரணமாக இருப்பவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர் என்றும் அவரது ஆடியோ ஒன்று சிக்கியிருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்களை சொல்லி அவர் பேசியது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

டென்ஷனான விஜய் ஆண்டனி: அந்த வீடியோவை பார்த்து டென்ஷனான விஜய் ஆண்டனி தனக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இடையே பிரச்சனையை உண்டாக்க பார்க்கும் அந்த யூடியூப் சேனலையும், அந்த தொகுப்பாளினியையும் சும்மா விட மாட்டேன் என கொந்தளித்து தற்போது ஒரு போஸ்ட்டை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அது முற்றிலும் பொய்யே: "என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம்..
நான் இப்போது சிறு மனவேதனையுடன் இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூடியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமான் அவர்களையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே! அந்த யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மானநஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்றும் அன்புடன் உங்கள் விஜய் ஆண்டனி. " என ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











