Kolai Public review: ஏன்டா வந்தோம்னு இருக்கு.. விஜய் ஆண்டனியின் கொலை பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: வித்தியாசமான கதைகளை தேடித் தேடி தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் க்ரைம் தில்லர் திரைப்படம் தான் கொலை. இந்த படத்தின் தலைப்பிலேயே இது என்ன கதை என்பதை யூகிக்க முடிந்து விடுகிறது.

பாலாஜி கே குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடத்துள்ளனர்.

கொலை திரைப்படம் இன்று வெளியாகி உள்ளநிலையில் படம் குறித்து பொதுமக்கள் கூறும் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Vijay Antony starrer Kolai public review

விஜய் ஆண்டனியின் கொலை: மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி தனது அப்பாட்மென்ட்டில் கொலை செய்யப்படுகிறாள். இந்த கொலை வழக்கு ரித்திகா சிங்கிடம் வருகிறது. ஆனால், அவர் விசாரித்து பயன் இல்லாமல் போனதால், துப்பறிவாளர் விஜய்ஆன்டனியிடம் கொலை குறித்த விசாரணையை கையில் எடுக்கிறார். பல யூகங்கள் வழியே விசாரணை நகர்கிறது. கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்பதுதான் கொலை படத்தின் மீதிக்கதை. இந்த படத்தை பார்த்துவிட்டு பொதுமக்கள் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் கருத்து: விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடுத்தர வயது தோற்றத்தில் நடித்து இருக்கிறார். அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். படத்தில் லேக் இருப்பது போல தெரியவில்லை. படம் விறுவிறுப்பாகத்தான் செல்கிறது. பிஜிஎம் நன்றாக இருந்தது என்று கூறியிருந்தார்.

ஏன்டா வந்தோம்: படம் பார்த்த மற்றொரு ரசிகர்கள் படம் ரொம்ப போரடித்தது, படத்தில் ஒன்னுமே இல்லை, ஏன் என்றால் படத்தின் தீம் சரியில்லை. எதுக்கு கொலை நடந்தது, கொலைக்கான காரணத்தையே படத்தில் சொல்லவில்லை. மாடலிங் உலகத்தை பற்றி நாம் ஓரளவுக்கு தெரிந்து கொண்டாலும் கதைக்கு பெரிய அளவில் வலுசேர்க்கவில்லை. சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு வேண்டிய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.படம் செம மொக்கையா இருக்கு, ஏன்டா வந்தோம் என்று தான் தோன்றுகிறது என பொதுமக்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X