Pichaikkaran 2 - மூன்று நாள்கள் ஓவர்.. பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Pichaikkaran 2 (பிச்சைக்காரன் 2) விஜய் ஆண்டனி நடித்து இயக்கிய பிச்சைக்காரன் 2 படத்தின் மூன்று நாள்கள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம்.
குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

ஹீரோவான விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.
இயக்குநரான விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார்.
ட்ரெண்டான பிகிலி: இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சூழலில் பிகிலி பாடல் வீடியோ வெளியானது. ஏழைகளை ஏமாற்றி பணத்திமிரில் ஆடுபவர்களை இனி பிகிலி என்று அழைக்கலாம் என்று விஜய் ஆண்டனி பேசி தொடங்கிய அந்தப் பாடல் இணையத்தில் படு ட்ரெண்டானது. இதனையடுத்து படமானது கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மூன்று நாள்கள் ஓவர் பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு: படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் ரிலீஸாகி மூன்று நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் அதன் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, 'பிச்சைக்காரன் 2' உலக அளவில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் தெலுங்கில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











