பிச்சைக்காரன் 2 இரண்டாம் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் விஜய் ஆண்டனி செய்த தரமான சம்பவம்!

சென்னை: விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவத்தை நிகழ்த்தி உள்ளது.

இதில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், தேவ் கில்,ஜான் விஜய்,ஹரீஷ் பேரடி, ராதா ரவி, யோகிபாபு, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி நடித்தது மட்டுமில்லாமல், எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பு செய்து தயாரிப்பு பணிகளையும் கவனித்துக்கொண்டார்.

Vijay antony starrer pichaikkaran 2 second day box office collection

விஜய் ஆண்டனி : இயக்குநர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூலையும் வாரிக்குவித்தது. நடிகர் விஜய் ஆண்டனியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக பிச்சைக்காரன் படம் அமைந்தது. பிச்சைக்காரன் படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

பிச்சைக்காரன் 2 : பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து, இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் ஆண்டனி எழுதி சசியை இயக்குமாறு கூறினார். ஆனால், சசி இதை மறுத்தத்தை அடுத்து விஜய் ஆண்டனியை இப்படத்தை இயக்கி இயக்குநராக மாறினார்.

Vijay antony starrer pichaikkaran 2 second day box office collection

3.25 கோடி வசூல் : பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் மே 19ந் தேதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியானது. முதல் நாளில் 3.25 கோடி ருபாய் வசூல் செய்திருப்பதாக விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் நாள் வசூல் : பிச்சைக்காரன் 2 இரண்டாம் நாளில் ரூ.4.5 கோடி வசூலித்து வேறலெவல் சாதனை படைத்துள்ளது. முதல் நாளைப் போல் இரண்டாம் நாளும் இப்படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. இப்படம் 2 நாள் முடிவில் உலகளவில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தை பல படங்களின் காப்பி என் ப்ளூ சட்டைமாறன் விமர்சித்திருந்த நிலையில் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. இன்றும் விடுமுறை என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X