Pichaikkaran 2 trailer: தனி பிளைட் கண்டெய்னர் ஃபுல்லா பணம்... மிரட்டும் பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் அவரே இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2.
இந்தப் படத்தின் முதல் பாகம் 2016ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 மே 19ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் அதிரடியான ட்ரெய்லரை விஜய் ஆண்டனி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்:விஜய்யின் சுக்ரன் திரைப்படம் மூலம் மியூசிக் டைரக்டராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, நான் திரைப்படம் முலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். நான், சலீம் என மாஸ் காட்டிய விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் திரைப்படம், மெஹா ஹிட்டாக அமைந்தது.
சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தரமான சம்பவம் செய்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை அவரே இயக்கி தயாரித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் காவ்யா தப்பார், ரித்திகா சிங், யோகி பாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
பிச்சைக்காரன் 2 படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், தற்போது ட்ரெய்லரும் ரிலீஸாகியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர், ஒரு மணி நேரம் லேட்டாகவே வெளியாகியுள்ளது. ஆனால், லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரேன்னு மிரட்டலாக வெளியாகியுள்ளது இந்த ட்ரெய்லர். விஜய் குருமூர்த்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனியின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது இந்த ட்ரெய்லர். இந்தியாவின் 7வது பெரிய பணக்காரன், ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன் என செம்ம மாஸ்ஸான லீட் உடன் விஜய் ஆண்டனி அறிமுகமாக, ஆக்ஷனில் மிரட்டியுள்ளது. ஸ்டைலிஷான மேக்கிங், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இது பிச்சைக்காரனா இல்லை கோடீஸ்வரனா என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. விஜய் ஆண்டனியின் பிளாஷ்பேக், ட்விஸ்ட் என ரசிகர்களுக்கு கமர்சியல் ட்ரீட் இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.

முன்னதாக இந்தப் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆர். பாண்டியராஜன் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்திருந்தோம். அந்தப் படத்தின் கதையை விஜய் ஆண்டனி அனுமதியில்லாமல் பயன்படுத்தியே பிச்சைக்காரன் 2 எடுத்துள்ளார். அதனால் தடை செய்ய வேண்டும் என ராஜகணபதி குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், அஜித்தின் சிட்டிசன் உட்பட பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த பரணி என்பவர், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலக்கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்தார். இந்த கதை திருட்டு பஞ்சாயத்துகளால் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவிருந்த பிச்சைக்காரன் 2, மே 19ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான ட்ரெய்லரும் பிச்சைக்காரன் 2 மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், பிச்சைக்காரன் 2 என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











