Vijay Antony daughter: சின்ன வயசுல தற்கொலை பண்ண இதுதான் காரணம்.. விஜய் ஆண்டனி வீடியோ டிரெண்டிங்!
சென்னை: இளம் வயதில் குழந்தைகள் தற்கொலை செய்துக் கொள்வதற்கான காரணங்களை விஜய் ஆண்டனி ஒரு பேட்டியின் போது விளக்கமாக பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து இப்படியாப்பட்ட அப்பாவை வச்சிக்கிட்டு ஏன் மா தற்கொலை பண்ணிட்ட என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என்றும் அவரது அப்பா அறையிலேயே மகள் லாரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

விஜய் ஆண்டனி சமீபத்தில், இசை கச்சேரி, ஷூட்டிங் என படுபிசியாக இருந்து வருகிறார். விரைவில் அவர் நடித்த ரத்தம் திரைப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக கொலை படத்தில் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை: பிச்சைக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏழை மக்களுக்கு பார்த்து பார்த்து ஏகப்பட்ட உதவிகளை செய்து வரும் விஜய் ஆண்டனிக்கா இப்படியொரு சோகமான நிகழ்வு நடக்கணும் என விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு மரணித்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி: தனிமையில் விடப்படும் நிலையில் தான் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறாங்க, இளம் வயதில் குழந்தைகள் தற்கொலை முடிவை எடுக்க காரணமே அவர்களது பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தான் காரணமாக இருக்கக்கூடும். ஸ்கூல்லயே ஒரு நாள் முழுவதும் படிச்சிட்டு வர பசங்கள, வீட்டுக்கு வந்த உடனே ட்யூஷன் அனுப்புவது, படி படி என போட்டு பிரஷர் கொடுப்பது என செய்வதால் தான் அந்த குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர்.
பெற்றோர்கள் பசங்கள ஃப்ரீயாவும் நிம்மதியாவும் வச்சிருக்கணும், எந்த பிரச்சனை வந்தாலும், நாங்க இருக்கிறோம் என மாரல் சப்போர்ட் கொடுத்தா நிச்சயமா இதை தவிர்க்கலாம் என விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











