விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட் வெளியானது!

சென்னை : நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் அட்டகாசமான நடிப்பில் சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது

அடுத்தடுத்த திரைப்படங்களில் அதிரடி காட்டி வரும் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ள திரைப்படம் தமிழரசன்

முற்றிலும் ஆக்சன் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது

 கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன்

விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி இப்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு படத்தின் கதையையும் வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைந்து வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோடியில் ஒருவன். மெட்ரோ, ஆள் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் மாபெரும் வெற்றி பெற்றது. கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

 அலட்டிக்கொள்ளாத நடிப்பு

அலட்டிக்கொள்ளாத நடிப்பு

ஹீரோவாக தொடர்ந்து திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வரும் விஜய் ஆன்டனியின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தமிழரசன். ஒவ்வொரு படத்திலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் தெறிக்கவிடும் விஜய் ஆண்டனி தமிழரசனில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை எஸ் கௌசல்யா ராணி என்பவர் தயாரித்து உள்ளார். நடிகை ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

மேலும் யோகிபாபு,முனீஸ்காந்த், கஸ்தூரி,சங்கீதா கிரிஷ், சுரேஷ்கோபி, சோனு சூட், சாயாசிங், பாண்டியராஜன்,ரோபோ சங்கர் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருவதால் இந்த படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது

 தமிழரசன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

தமிழரசன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

கடந்த ஆண்டே ரிலீசாக இருந்த தமிழரசன் சில சூழ்நிலைகளால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழரசன் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் தமிழரசன் தெலுங்கில் விக்ரம் ரத்தோட் என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X