தன்னுடைய படத்திற்காக எடிட்டரான இசையமைப்பாளர்.. சம்பளம் தர மறுத்த தயாரிப்பாளர்.. யாருன்னு பாருங்க!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படத்திற்காக எடிட்டர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, கிழக்கு கடற்கரை சாலை படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.
தொடந்து நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தனக்கான படங்களை தேர்வு செய்து வெற்றி கண்டு வருகிறார்.

புரடெக்ஷன் பணிகள்
கடைசியாக அவரது நடிப்பில் கொலைக்காரன் படம் வெளியானது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனிக்கு ஜோடி
மேலும் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன் என்ற படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

எடிட்டர் அவதாரம்
இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை நடிகர் விஜய் ஆண்டனியே மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இசையமைப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது எடிட்டர் அவதாரமும் எடுத்துள்ளார்.

சம்பளம் தரவில்லை
இதுதொடர்பாக பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், கோடியில் ஒருவன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனிதான் கவனிக்கிறார். முதல் பாதியை பார்த்துவிட்டேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. இதற்காக நாங்கள் சம்பளம் கூட தரவில்லை என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











