அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்.. ஸ்கிரிப்ட் எழுதும் விஜய் ஆண்டனி.. இதிலும் அதே சென்டிமென்ட்?

By

சென்னை: அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Meghna Vincent Ex-Husband Second Marriage | Don Tony • PonMagal Vandhal, Deivam Thandha Veedu

விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள், கோவிந்த மூர்த்தி உட்பட பலர் நடித்த படம், பிச்சைக்காரன்.

சசி இயக்கிய இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

விஜய் ஆண்டனிக்கு பெரிய வியாபார மார்க்கெட்டை உருவாக்கிய இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான. அம்மா சென்டிமென்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம், தெலுங்கில் பிச்சக்காடு என்ற பெயரில் டப் ஆகி வெற்றி பெற்றது. டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படம் அங்கு நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இது தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அடுத்த பாகம்

அடுத்த பாகம்

இந்நிலையில் இந்த மெகா ஹிட் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 4 மாதமாக இதன் ஸ்கிரிப்டை எழுதி வருகிறேன். முதல் பாகத்தை சசி சார் இயக்கி இருந்தார். அவர் மற்றப் படங்களில் பிசியாக இருப்பதால், இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை.

லாக்டவுன்

லாக்டவுன்

படத்துக்கு நானே இசை அமைக்கலாம். இந்த லாக்டவுன் நேரத்தில் புதிய எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்த கற்று வருகிறேன். கூடவே சினிமா தொடர்பான டெக்னிக்கல் விஷயங்களையும் கற்று வருகிறேன். லாக்டவுன் காரணமாக சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துக்கொள்கிறேன் என்று சொன்னதைப் பற்றி கேட்கிறார்கள். நான் சவுண்ட் இன்ஜினீயராக சினிமாவுக்கு வந்தவன் நான்.

தயாரிப்பாளராக

தயாரிப்பாளராக

பிறகு இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளராக வளர்ந்தேன். 10 படங்கள் தயாரித்திருக்கிறேன். ஒரு தயாரிப்பாளராக அவர்களின் வேதனை எனக்குத் தெரியும். என்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததால், அந்த முடிவை எடுத்தேன்' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 ஆம் பாகத்திலும் அம்மா சென்டிமென்ட் தானா? என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X