கடவுள் என் முன்னாடி வந்தா? ட்விட்டரை அலறவிட்ட விஜய் ஆண்டனியின் பதிவு!

சென்னை : இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கடவுள் என் முன்னாடி வந்தா.... நீங்க என்ன கேப்பிங்க? என ஒரு கேள்வியை பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்கள் மனதில் தக்க வைத்துக் கொண்டு தற்பொழுது வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் தன்மைக்கொண்ட விஜய் ஆண்டனி தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

நீங்க என்ன கேப்பிங்க?

நீங்க என்ன கேப்பிங்க?

கடந்த சில நாட்களாக ட்விட்டரே அலறவிடும் அளவுக்கு கருத்துக்களை பகிர்ந்து வரும் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில்,கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, ரெக்வெஸ்ட் ஆ கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க? என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

ரயில்ல தள்ளி விட்ருங்க

ரயில்ல தள்ளி விட்ருங்க

முன்னதாக மாணவி சத்யாவின் கொலைக்கு நியாயம் கேட்கும் வகையில், சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பிரளயத்தை ஏற்படுத்தியது.

க்ரைம் திரில்லர் மூவி

க்ரைம் திரில்லர் மூவி

விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கொலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். கொலை'படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ரித்திகா சிங் ஜோடி

ரித்திகா சிங் ஜோடி

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X