Vijay Antony: "அது சக்ரியா தான்... நல்ல மீனிங்ல புரிஞ்சுக்கோங்க..” விஜய் ஆண்டனி கொடுத்த விளக்கம்!
சென்னை: சுக்ரன் திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக வலம் வருகிறார். தனது இசையில் வெளியாகும் பாடல்களில் வித்தியாசமான வார்த்தைகளை போட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற பியா பியா பாடல் வரி குறித்து விஜய் ஆண்டனி கொடுத்த 'அடேங்கப்பா' விளக்கம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி கொடுத்த 'அடேங்கப்பா' விளக்கம்: தமிழில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தொடர்ந்து டிஷ்யூம், நன் அவனில்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், அங்காடித் தெரு, வெடி, வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, பின்னர் நடிப்பிலும் களமிறங்கினார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான நான், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து சலீம், காளி, பிச்சைக்காரன் என பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதேபோல் பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குநராகவும் களம் கண்டார். இருப்பினும் விஜய் ஆண்டனியின் பாடல்களுக்கு என ரசிகர்களிடம் தனி வைப் உள்ளது.
வெஸ்டர்ன் இசையிலும் கானா வகையில் உருவாகும் குத்து பாடல்களிலும் விஜய் ஆண்டனிக்கு என தனி ஸ்டைலே இருந்தது. அதேபோல் பாடல் வரிகளில் வித்தியாசமான வார்த்தைகளை போட்டு பல ஜாலங்கள் செய்வதில் விஜய் ஆண்டனி கில்லாடி. பல பாடல்களில் விஜய் ஆண்டனி சேர்க்கும் வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியாது. சொல்லப் போனால் அர்த்தங்களே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டபுள் மீனிங் வார்த்தைகளையும் சர்வ சாதாரணமாக பாடல்களின் நடுவில் சேர்த்து ரசிகர்களை ஆட்டம் போட வைப்பார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்த விஜய் ஆண்டனி, சர்ச்சையான பாடல் வரிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். பிருத்விராஜ், ப்ரியாமணி நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'பியா பியா' பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்ற சில வார்த்தைகள் இன்ஸ்டா ரீல்ஸ்களில் செம்ம ஹிட் அடித்து வருகின்றன.
அதாவது வா வா சப்றீயா என்ற வார்த்தை டபுள் மீனிங்கில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர். அதுகுறித்து விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி, அது சப்றீயா இல்ல.. சக்ரீயா எனக் கூறியுள்ளார். அதேபோல் குத்த வச்சு குத்திக்கவா என்ற வரி பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளார். அதனை வேற மாதிரி நல்ல விதமா புரிஞ்சுக்கணும் என நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை கலாய்த்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த விளக்கம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











