மகள் மீராவின் உடல்.. "பார்த்து பார்த்து" பதறிய விஜய் ஆண்டனி மனைவி.. கண்ணீரில் மூழ்கிய தேவாலயம்

சென்னை: விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் இன்று காலை 11 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு சிறப்பு பிரார்த்தனைக்காக மீராவின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது, விஜய் ஆண்டனியின் மனைவி பதறிய காட்சிகள் தற்போது வெளியாகி நெஞ்சை உலுக்கி வருகின்றன.

விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவின் மூத்த மகளான மீரா தற்கொலை செய்துக் கொண்டு திடீரென உயிரிழந்தது பலரையும் பதைபதைப்பில் ஆழ்த்தி உள்ளது. விஜய் ஆண்டனி தனது மகள் மறைவு காரணமாக துக்கம் தாளாமல் பித்துப் பிடித்தவர் போலவே மாறிவிட்டார் என தயாரிப்பாளர் டி. சிவா சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Vijay Antony wife Fathima feels sad about her daughter at Church shocks fans

மனமுடைந்த விஜய் ஆண்டனி: செல்லமாக 16 ஆண்டுகள் அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த மகள் இவ்வளவு சீக்கிரத்திலேயே புதைக்கப்படுவாள் என நினைக்காத நிலையில், மூத்த மகளின் மரணம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமாவை மனதளவில் ரொம்பவே பாதித்துள்ளது.

தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை: விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் சிறப்பு பிரார்த்தனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கே விஜய் ஆண்டனி குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தேவாலய தொண்டர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி மீராவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

பதறிய பாத்திமா: தனது மகளின் உடலை தேவாலயத்திற்கு கொண்டு வரும் போது சிலர் கீழே போட்டு விடுவது போல செய்ய, பதறிய பாத்திமா விஜய் ஆண்டனி "பார்த்து.. பார்த்து" பதறிய காட்சிகள் தற்போது வெளியாகி நெஞ்சை உலுக்கி வருகின்றன.

தனது கண்ணீரை துடைக்க வந்தவள் என சில மாதங்களுக்கு முன்னதாக தனது மூத்த மகளுக்கு முத்த மழை பொழிந்து பாராட்டுக்களை குவித்திருந்த பாத்திமா தற்போது மகளின் மறைவால் மனம் உடைந்து வேதனையில் கதறும் காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளன.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X