விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. கடைசியாக போனில் பேசியது யார்? போலீசார் விசாரணை!
சென்னை: விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விஜய்ஆண்டனி, இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருக்கிறார்.
2005ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார் விஜய் ஆண்டனி. புதுவிதமான ஒலிகள், ஆட்டம்போட வைக்கும் மெட்டுகள் போட்டு ரசிகர்களைக் கவர்ந்தார்.

விஜய் ஆண்டனி: இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி 2012ம் ஆண்டு நான் படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக மாறினார். தொடர்ந்து இதைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், யமன், அண்ணாதுரை, காளி, பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தூக்கிட்டு தற்கொலை: இந்நிலையில் விஜய்ஆண்டனியின் மகள் மீரா வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார். சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இவர், நேற்று இரவு தனது அறையில் வழக்கம்போல படுக்க சென்ற இவர், துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி: அதிகாலையில் 3 மணி அளவில், அவரது தந்தை விஜய் ஆண்டனி மகளின் அறைக்கு வந்த போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பணியாளர்களின் உதவி உடன் அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லாராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
முதற்கட்ட விசாரணை: தேனாம்பேட்டை போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக இதற்காக அவர் மருந்து எடுத்துக்கொண்டதாகவும் செல்லப்படுகிறது. மேலும், மீரா படித்து வரும் சர்ச் பார்க் பள்ளியிலும் அவரது நண்பர்களிடமும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடித்தி வருகின்றனர்.
கடைசியாக பேசியது யார்: இவரது தற்கொலைக்கான காரணம் தெரியாததால், தேனாம்பேட்டை போலீசார், மீராவின் தொலைபேசியை ஆய்வு செய்து அவர் கடைசியாக யாரிடம் பேசினார்...என்ன பேசினார் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது காவேரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருவதால், அவரது உடல்10 மணி அளவில்உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











