தயவு செய்து யாரும் இப்படி பண்ணாதீங்க.. ராபர்ட் மாஸ்டரின் உருக்கமான பதிவு!
சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ராபர்ட் மாஸ்டர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19-ம் தேதி அதிகாலை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதே ஆன மீரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விஜய் ஆண்டனி மகள்: சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மீரா, கடந்த ஓராண்டாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார், இதற்காக அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறுதி ஊர்வலம் 20ந் தேதி கீழ்ப்பாக்கத்தில உள்ள கல்லரைத் தோட்டத்தில் நடைபெற்றது.
நானும் இறந்துவிட்டேன்: இதையடுத்து,மகள் மீராவின் மறைவு குறித்து குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், அன்பு நெஞ்ஜங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன் என பதிவிட்டு இருந்தார்.

அப்பா, அம்மாகிட்ட பேசுங்க: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராபர்ட் மாஸ்டர், விஜய் ஆண்டனி தற்கொலை செய்துகொண்டதற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விஜய் ஆண்டனி சார் மகளோட இறப்பு ரொம்ப பெரிய இழப்புத்தான், படம் சம்பந்தமாக விஷயமாக இருந்தால் சொல்லி கூல் பண்ணலாம், ஆனால் இந்த இழப்பு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம் யாருக்கும் பொதுவாக வராது, அப்படி சூசைட் பண்ணுற அளவு யோசிக்கிறீங்க என்றால் அந்த பிரச்சனையை அப்பா, அம்மாகிட்ட சொல்லி சரிபண்ணலாம்.
தயவு செய்து இப்படி பண்ணாதீங்க: உங்களுக்கு பிரச்சினை இருந்தா பெற்றோர், நண்பர்கள் அல்லது உங்க டீச்சர் யாரிடத்திலாவது சொல்லி சரி பண்ணுங்க. சூசைட் பண்ணுறளவு யோசிக்கிற உங்களுக்கு வாழவும் முடியும். தயவு செய்து யாரும் இந்தமாதிரி தற்கொலை முடிவைப் பற்றி யோசிக்க வேணாம். விஜய் ஆண்டனி சார் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் அந்த வீடியோவில் ராபர்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications