விஜய் ஆண்டனியின் மகள் இறுதிச்சடங்கு இன்று இல்லை நாளைதான்... காரணம் இதுதான்.. முழு விவரம் உள்ளே
சென்னை: vijay Antony daughter Funeral (விஜய் ஆண்டனியின் மகள் இறுதிச்சடங்கு) விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில் நாளை நடக்கும் என கூறப்பட்டுள்ளது.
நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட விஜய் ஆண்டனி சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றார். எந்த ஜானர் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவ ஸ்டைலை வைத்துவிடுவது விஜய் ஆண்டனியின் வழக்கம்.

நடிகர் அவதாரம்: இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது அளவான நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தன. நடிகராக இருந்த அவர் பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடைசியாக அவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியானது.
விஜய் ஆண்டனிக்கு நேர்ந்த துயரம்: விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் இருந்தார். 12ஆம் வகுப்பு படித்து வந்த அவர் படிப்பு, கலை என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர். மேலும் பள்ளியில் மாணவர் சங்க செயலாளர் கல்ச்சுரல் கமிட்டி லீடர் என பல பொறுப்புகளையும் வகித்தவர். விஜய் ஆண்டனியுடன் ரொம்பவே நெருக்கமான அவர் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை: இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் அவர் இன்று அதிகாலை தூக்கு போட்டுக்கொண்டார். காலை விடிந்ததும் அறை கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர் தொங்கிய நிலையில் இருந்தார். இதனையடுத்து மயிலாப்பூரில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க; அடுத்ததாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைத்து அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு நாளை: அதனையடுத்து அவரது உடல் விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று மாலை மீராவுக்கான இறுதிச்சடங்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த இறுதிச்சடங்கு இன்று நடக்காது நாளைதான் நடக்கும் என்று தெரியவந்திருக்கிறது.
இதுதான் காரணம்?: அதாவது மீராவின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்க கல்லறையில் இடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் 11 மணிக்குள் மீராவின் இறுதிச்சடங்கு கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











