விஜய் ஆண்டனியின் மார்கன்.. மூன்றாவது நாள் வசூல் இவ்வளவா?.. டீசன்ட்டான வரவேற்புதான்

சென்னை: விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் நடிகராகவும் கலக்கிவருகிறார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த பெரிய வெற்றி இதுவரை அவருக்கு நடிகராக கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அவர் மார்கன் படத்தில் நடித்திருக்கிறார். படமானது கடந்த 27ஆம் தேதி வெளியாகி டீசன்ட்டான வரவேற்பை பெற்றுவருகிறது.

விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதனையடுத்து அவர் இசையமைத்த டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பையே பெற்றன. முக்கியமாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே க்ளாசிக் ஹிட்டடித்தன. நாக்க முக்கா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.

முன்னணி இசையமைப்பாளர்: தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனிக்கு விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்துக்கு நகர்ந்தார் அவர். தொடர்ந்து அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட்டாகிக்கொண்டிருக்க ஹீரோவாகும் ஆசை அவருக்கு வந்தது.

Vijay Antony s Maargan Box Office is 2 Crores Rupees at Third Day
Photo Credit:

ஹீரோவாக பிஸி: அதன்படி நான் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அவர். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. முக்கியமாக விஜய் ஆண்டனியின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படிதான் இருந்தது. அடுத்ததாக அவர் நடித்த சலீம், பிச்சைக்காரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கவும் செய்தார். அதுவும் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில்தான் அவர் விபத்திலும் சிக்கினார்.

மார்கன் விஜய் ஆண்டனி: அவருக்கு படங்கள் வரிசையாக தோல்வியை கொடுத்தாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் வித்தியாசமாக இருக்கிறது என்றே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. விஜய் இப்போது மார்கன் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை லியோ ஜான் பால் என்பவர் இயக்கியிருக்கிறார்.

க்ரைம் த்ரில்லர்: இந்தப் படமானது க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது.கடந்த 27ஆம் தேதி படம் ரிலீஸானது. வழக்கமான விஜய் ஆண்டனி படமாகத்தான் இது இருக்கும் என்று நினைத்துதான் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக படத்தின் மேக்கிங், திரைக்கதை எல்லாம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தன. இதனால் படத்துக்கு அவர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள்.

வசூலில் என்ன நிலை?: விமர்சன ரீதியாக படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.அதேபோல் வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாகவே பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் இரண்டரை கோடி ரூபாய்வரை வசூலித்ததாக Sacnilk வலைதளம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று படத்தின் வசூல் குறித்த தகவலை அந்த வலைதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று 1 கோடியே 80 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X