விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்.. இயக்குநர் நன்றி!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் முன்னதாக ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்சார் செய்து முடித்த பின்பு சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சி, தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இணைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்சார் நிறைவு செய்தபின்பு எப்படி இப்படி காட்சியை சேர்க்க முடியும் என்று பலதரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தில் சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Vijay Antony Mazhai pidikkatha manithan Vijay Milton

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்த போதிலும் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்ந்து கொலை, ரத்தம் என அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் அவரது மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள நிலையில் மேகா ஆகாஷ் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய ஒரு நிமிட காட்சி: இந்நிலையில் இந்த படத்தின் சென்சாருக்கு பிறகு படத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் குறித்து முன்னதாகவே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இந்த காட்சி சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் இருந்த பிரச்சனை காரணமாகவே இந்த காட்சி படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இது குறித்து விளக்கம் அளிக்க தயாரிப்பு தரப்பு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்து கடைசியில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் நன்றி: இந்நிலையில் சென்சாருக்கு பிறகு இந்த காட்சி படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த காட்சியை படத்திலிருந்து தயாரிப்பு தரப்பு நீக்கியுள்ளது. இந்நிலையில் இந்த காட்சி நீக்கப்பட்டது குறித்து படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த நடிகர் சரத்குமாருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் அனைத்து செயல்களுமே படத்தின் வெற்றிக்காகவும் நன்மைக்காகவுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீக்கப்பட்ட காட்சி: கடந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான மழை பிடிக்காத மனிதன் படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், போதிய வரவேற்பை பெறவில்லை. படத்தின் முதலிலேயே இணைக்கப்பட்டுள்ள இந்த ஒரு நிமிட காட்சி விஜய் ஆண்டனியின் கேரக்டரை வெளிப்படுத்தியதால் படத்தில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த காட்சி தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X