Nooru Saami Box Office: பிச்சைக்காரன் போல பிக்கப் ஆகாத நூறு சாமி.. 5 நாள் வசூல் இவ்வளவு தானா?

சென்னை: பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் சசி இயக்கத்தில் சுவாசிகா, விஜய் ஆண்டனி, அஜய் திஷன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான நூறு சாமி திரைப்படத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், படத்தை குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்க்க பலரும் ஆர்வம் காட்டவில்லை என்பது பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது 43 வயது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்களின் கதையை இயக்குநர் சசி ரொம்பவே துணிச்சலாக திரையில் காட்டிய நிலையில், இது கமர்ஷியல் படம் இல்லை என்றும் என்டர்டெயின்மென்ட்டாக இருக்காது என நினைத்த மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சசியின் 'நூறு சாமி' படத்தை பிச்சைக்காரன் படத்தை பார்த்தது போல பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.

Vijay Antony s Nooru Saami Day 5 Box Office Collection also very dull

படம் வெளியாகி 5 நாட்களில் இதுவரை 5 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாதது தான் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாய் கிழவி போல ஓடல: இந்த ஆண்டு பெண்கள் சுய முன்னேற்றத்தை வலியுறுத்தும் விதமாக சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி திரைப்படம் வெளியாகி 90 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராதிகாவுடன் போட்டிப் போடும் அளவுக்கு சுவாசிகாவின் நடிப்பை பலரும் பாராட்டிய நிலையிலும், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நூறு சாமி திரைப்படம் 5 நாட்கள் ஆகியும் வசூலில் எந்தவொரு அசுரத்தனமான வளர்ச்சியையும் அடையவில்லை.

5 கோடிக்கும் குறைவான வசூல்: வெள்ளி, சனி, ஞாயிறு ஓரளவுக்கு வசூல் வந்த நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை படத்தின் வசூல் அப்படியே படுத்து விட்டது. கடைசியாக தமிழில் வெளியான சூர்யாவின் கருப்பு படம் ரசிகர்களை பெருமளவில் தியேட்டருக்கு கொண்டு வந்து 340 கோடி வசூலை ஈட்டிய நிலையில், நூறு சாமி திரைப்படம் அந்த மேஜிக்கை செய்யத் தவறிவிட்டது. சீரியல் போல உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் விமர்சித்த நிலையில், தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என பலரும் நினைத்து விட்டனர். இதுவரை வெறும் 4.80 கோடி ரூபாய் மட்டுமே நூறு சாமி வசூல் செய்திருப்பதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது.

பாராட்டு மழை மட்டும்: நூறு சாமி படத்துக்கு பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து நடிகை சுவாசிகா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழை மட்டுமே கிடைட்த்துள்ளது என்றும் பாக்ஸ் ஆபீஸ் நிரம்பவில்லை என்பது தான் யதார்த்தம் என்கின்றனர். விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அதிகபட்சமாக 42 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அர்ஜுன் தாஸின் கான் சிட்டி, கேஜேஆரின் அங்கீகாரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியாகும் நிலையில், படத்தின் வசூல் மேலும், குறையும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X