பிச்சைக்காரன் மேஜிக் ரிப்பீட் ஆகுமா? விஜய் ஆண்டனி - சசி காம்போவின் ‘நூறு சாமி’ டிரைலர் அவுட்!
சென்னை: 'பிச்சைக்காரன்' என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மற்றும் எமோஷனல் கதைகளின் மன்னன் இயக்குநர் சசி ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'நூறு சாமி'. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தின் விறுவிறுப்பான அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.
ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'நூறு சாமி' படத்தின் ட்ரெய்லரை, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலம் வெளியிட்டு, படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூகக் கருத்துக்கள் மற்றும் எமோஷனல் காட்சிகள் நிறைந்ததாக இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அடிப்படை தேவை இருக்கிறது, சாப்பிடுவது, தூங்குவது, துணை தேடிக் கொள்வது என தொடங்குகிறது. 2.30 ஓடக்கூடிய அந்த டிரைலரில் காதல், கண்ணீர், சோகம், எமோஷன் என அனைத்தும் இடம் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்: இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து, 'ஜெய் பீம்' புகழ் லிஜோ மோல் ஜோஸ், சுவாசிகா, அஜய் திஷான், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையில் பலத்த முக்கியத்துவம் இருக்கும்படி இயக்குநர் சசி திரைக்கதை அமைத்துள்ளார்.
ஜூன் 19ந் தேதி ரிலீஸ்: விஜய் ஆண்டனி தனது வழக்கமான எதார்த்தமான நடிப்பை இத்திரைப்படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications