Kubera: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரனா? தனுஷின் குபேராவா? எது பெஸ்ட்!

சென்னை: சேகர் கம்முலா இன்று தியேட்டரில் வெளியான திரைப்படம் தான் குபேரா. இப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இன்னைக்கு படம், பான் இந்திய திரைப்படமாக, தமிழ். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இன்னைக்கு வெளியானது. கலையான விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படம் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை போல இருக்கு என சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சார் திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ், சேகர் கம்முலாவுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் நாகார்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா, ஜிம் சர்ப், பாக்யராஜ், பகவதி பெருமாள், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இயற்கை வளத்தை திருடும்வகையில் கார்ப்பரேட் நிறுவனம் கையகப்படுத்த திட்டம் போடுகிறது. இதற்காக ஒரு லட்சம் கோடி லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. கருப்பு பணமாக இருப்பதை நல்ல பணமாக மாற்றி கொடுக்க வேண்டி இருப்பதால் அந்த கார்ப்பரேட் நிறுவனம் பிச்சைக்காரர்களை பினாமியாக ஆக்க பிளான் போடுகிறது.

Dhanush Kuberaa pichaikkaran 2
Photo Credit:

படத்தின் கதை: அதற்காக நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து பினாமி என்ற பெயரில் அவர்கள் மூலமாக இந்த பணத்தை பரிவர்த்தனை செய்ய முயற்சி செய்கிறது. இந்த கார்ப்பரேட் முதலாளியிடம் பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ் மாட்டிக்கொள்கிறார். இவர்களிடம் இருந்து தனுஷ் எப்படி தப்பித்தார் என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் தனுஷ் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், படத்தில் ஹீரோவாக இல்லாமல், பயப்படுவது, அடிவாங்குவது, ஓடுவது என ஒரு மாஸ் ஹீரோவுக்கான படமாக இந்த படம் இல்லை. இந்த படத்தில் தனுசை விட, நாகார்ஜூனுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் என்பதால், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டாரா என்கிற சந்தேகம் வருகிறது.

எதுக்கு ராஷ்மிகா: ஆனால், தனுஷ், நாகார்ஜூனா என இருவருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். அதே போல, ராஷ்மிகா எதற்கு படத்தில் இருக்கிறார் என்றும் சொல்லும் அளவிற்கு சும்மா வந்து செல்கிறார். படத்தில், மனதை வடும் காட்சி இல்லை, எமோஷனல் இல்லை, ரொமான்ஸ் இல்லை, காதல் இல்லை என பல இல்லைகள் குபேரா படத்தில் இருக்கிறது. இருப்பினும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்த தனுசை பாராட்டலாம்.

எது பெஸ்ட்: படத்தின் பல காட்சிகளை பார்க்கும் போது, விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தை நினைவு படுத்துகிறது. பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரர்களின் வலியை அப்பட்டமாக சொல்லி இருப்பார். அந்த படத்தில் பல காட்சிகளில் நம்மையும் அறியாமல் அழுதுவிடுவோம். அதே போல, பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திலும், தெருவில் பிச்சை எடுத்து வந்தவர் எப்படி... கோடீஸ்வரனாக மாறுகிறார் என்பதை அழகாக சொல்லி இருப்பார் விஜய் ஆண்டனி. கடைசியில் பிச்சைக்காரன் தனது அனைத்து சொத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிடுவார். குபேரன் படத்தினுடைய கான்சப்டும் ஏறைக்குறைய இதுதான். அப்படி இருந்தும் கிளைமாக்ஸ் காட்சியில் எதையும் சரியாக சொல்லாமல் முடிந்தது போல இருக்கு என இணையத்தில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குபேரன் படத்தை வேண்டுமானால், பிச்சைக்காரன் 3 என்று சொல்லாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X