விஜய் ஆண்டனியின் பூக்கி.. 'புடிக்கல புடிக்கல' பாடல் வெளியானது!

சென்னை: பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மார்கன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. 13ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கி உள்ளார். ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகி இருக்கும் "பூக்கி" படத்தில் இருந்து அட்டகாசமான பாடல் ஒன்று வெளியாகி இளசுகளை ஆட்டம் போட வைத்துள்ளது.

Vijay Antony pookie song
Photo Credit:

விஜய் ஆண்டனியின் பூக்கி: "பூக்கி" இன்றைய தலைமுறையினர் தங்களுக்குள் கொஞ்சி அழைக்கும் வார்த்தையே குறிப்பிடும் வகையில் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக் பாஸ் சத்யா, MJ ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அட்டகாசமான பாடல்: இப்படத்தில் இருந்து, "புடிக்கலே புடிக்கலே" பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் சந்தோஷ் ஹரிஹரன், ருக்சார் பந்துகியா ஆகியோரின் குரலில் லவரதன் இந்த பாடலை எழுதி உள்ளார். இந்த காலத்து காதலர்களுக்கு பெற்றோர்கள் எதிரி இல்லை, அவர்களே, அவர்களின் காதலுக்கு எதிரியாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் காதல் மீதும், காதலி மீதும் இருக்கும் ஈர்ப்பு நாட்கள் செல்ல செல்ல பெரிய தொல்லையாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு பாடல் தான் இந்த "புடிக்கலே புடிக்கலே" பாடல். இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் டிரெண்டாகி வைரலாகிறது. இந்த பாடல் இப்படி வைரலாவதை பார்க்கும் போது தான், நாட்டுல பல ஜோடி இப்படித்தான் அடிச்சிட்டு காதலிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X