Pooki Day 1 collection: ‘பூக்கி’ படத்தின் முதல் நாள் வசூல்.. சூப்பரா? சுமாரா? விவரம் இதோ!

சென்னை: கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷான், தனுஷா நடிப்பில், விஜய் ஆண்டனியின் இசையில் நேற்று பூக்கி திரைப்படம் தியேட்டரில் வெளியானது. காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாக காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மார்கன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் இப்படத்தில் லீட்ரோலில் நடித்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கி உள்ளார். இன்றைய தலைமுறையினர் தங்களுக்குள் கொஞ்சி அழைக்கும் வார்த்தையே குறிப்பிடும் வகையில் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக் பாஸ் சத்யா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vijay Antony pookie box office
Photo Credit:

படத்தின் கதை: அஜய் திஷனும், தனுஷா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். ஒரு நாள் இவர்கள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது இருவருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த வாக்கு வாதம் சண்டையாக மாறி இருவரும் சண்டை போட்டுக்கொண்ட வருகின்றனர். அந்த நேரத்தில் இவர்களின் கார் சிக்னலில் நிற்கும்போது, மற்றொரு கார் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிடுகிறது. இதனால் ஆத்திரப்படும் அஜய் திஷன் அந்த காரை சேஸ் செய்து பிடித்து, அந்த காரை ஓட்டி வந்தவரிடம் சண்டை போடுகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி வரை செல்கிறது. தனுஷா சண்டை வேண்டாம் சென்றுவிடுவோம் என எவ்வளவோ சொல்லியும், அஜய் சண்டையை நிறுத்தாததால், தனுஷா அவன் கன்னத்தில் அடித்து நிறுத்த சொல்கிறாள். இதனால் கோபமடைந்த அஜய், தனுஷாவை பதிலுக்கு அடிக்கிறார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட, இருவருக்கும் இடையே பிரச்சனை மேலும் பெரிதாகிறது. இந்த சண்டையால் இவர்களின் காதல் என்ன ஆனது என்பது தான் பூக்கி திரைப்படத்தின் கதை.

முதல் நாள் வசூல்: மார்கன் திரைப்படத்தில் நடித்தது போலவே அஜய் திஷன் இந்த படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காதலர் தினத்திற்கு ஏற்றபடி காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ 15 லட்சத்தை வசூலித்துள்ளது. இன்று காதலர் தினம் என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X